Subscribe Us

header ads

நடுவானில் பறந்த விமானத்தின் கதவை திறக்க முயற்சித்த பயணியால் பரபரப்பு

அமெரிக்க போஸ்டன் நகரிலிருந்து லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு திங்கட்கிழமை பயணித்த வேர்ஜின் அமெரிக்கா விமானமானது பயணியொருவர் விமானத்தின் கதவை திறக்க முயற்சித்ததால் அவசர கால நிலைமையின் கீழ் நெப்ராஸ்கா மாநிலத்திலுள்ள ஓமாஹா நகரில் தரையிறக்கப்பட்டது.
 கலிபோர்னியாவைச் சேர்ந்த டக் அடம்ஸ் என்பவரே நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முயற்சித்துள்ளார்.
 
மருத்துவமனையில் நோயாளர்களை அடையாளம் காண்பதற்கு பயன்படும் பட்டியை அணிந்திருந்த அந்நபர் தனக்குத்தானே முணுமுணுத்துக்கொண்டும் பிறிதொரு பயணியொருவருடன் விவாதத்திலும் ஈடுபட்டதை தொடர்ந்தே அவர் விமானத்தின் கதவை திறக்க முயற்சித்துள்ளார்.
 
ஒமாஹா விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டதையடுத்து டக் அடம்ஸ் கைது செய்யப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டார்.

  

Post a Comment

0 Comments