அரசாங்கத்திற்கு மக்கள் சிகப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக அஸ்கிரி பீடம்
சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த சனிக்கிழமை நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பில் அஸ்கிரி
பீடம் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது.
கொள்கைகள் மற்றும் நிர்வாகப் பொறிமுறைமையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்
என்பதனையே மக்கள் அரசாங்கத்திற்கு உணர்த்தியுள்ளனர் என அஸ்கிரி பீடத்தின்
உறுப்பினர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் ஆதரவினைப் பெற்றுக்கொள்ள கொள்கை மாற்றம்
அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் இளம் தலைவர்களின் வருகை கட்சியைப்
பலப்படுத்தியுள்ளதாகவும், எதிர்கால
தேர்தல்களின்போது அரசாங்கம் கடும் சவால்களை எதிர்நோக்க நேரிடும் எனவும் அவர்
தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை சரியான பாதைக்கு அழைத்துச் செல்லும் எச்சரிக்கை சமிக்ஞையாக ஊவா
மாகாணசபைத் தேர்தல் முடிவுகளை கருத்திற்கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊவா மாகாணசபைத் தேர்தல்கள் ஜனாதிபதித் தேர்தல்களில் பாதிப்புக்களை
ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஊவா மாகாணசபையில் பதவி வகித்த அமைச்சர்களில் பலர் ஊவா மாகாணத்தைச்
சேர்ந்தவர்கள் அல்ல எனவும், கொழும்பு உள்ளிட்ட
வெளியிடங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர்கள் செயற்திறனற்றவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நன்றி: globaltamilnews
/Az


0 Comments