இலங்கை கிரிக்கெட் அணி பயிற்றுவிப்பாளர் தேர்வுக் குழுவில் இருந்து
இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர், முன்னாள் இலங்கை அணி வீரர்
சனத் ஜயசூரிய விலகியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தேசிய அணி பயிற்றுவிப்பாளரை தெரிவு செய்யவென தேருநர் நிறைவேற்றுக் குழு ஒன்றை அமைத்தது.
தேசிய அணி பயிற்றுவிப்பாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்த 9 பேரில்
மூவரின் பெயர் இன்று காலை நடைபெற்ற நிறைவேற்றக் குழுக் கூட்டத்தில் தெரிவு
செய்யப்பட்டதாக தெரியவரும் நிலையில் சனத் ஜயசூரிய இக்கூட்டத்தில்
பங்கேற்கவில்லை என உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த சனத் ஜயசூரிய தேசிய அணி
பயிற்றுவிப்பாளரை தெரிவு செய்யும் நிறைவேற்றுக் குழுவில் இருந்து தான்
இராஜினாமா செய்துள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.
சனத் ஜயசூரிய தனது இராஜினாமா கடிதத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்
தலைவர் ஜயந்த தர்மதாஸ மற்றும் செயலாளர் நிஷாந்த ரணதுங்க ஆகியோருக்கு
மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்துள்ள நிலையில் இராஜினாமா ஏற்றுக்
கொள்ளப்பட்டதா இல்லையா என்பது இன்னும் தெரியவரவில்லை.
சனத் ஜயசூரிய அழுத்தம் காரணமாக இராஜினாமா செய்தாரா என்ற சந்தேகம்
வலுப்பெற்றுள்ளது. அண்மைக் காலங்களாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்குள்
முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-AsM-


0 Comments