ஐ.தே.கட்சி கற்பிட்டி கிளையின் விசேட பொதுக்கூட்டம் ஒன்று இன்று மாலை கற்பிட்டி பிரதான வீதிக்கருகில் இருக்கும் திடலில்M.H.முஹம்மத் (உஹது) தலைமையில் நடைபெற்றது .
இந்த விசேட கூட்டம் புத்தளம் தேர்தல் தொகுதியின் ஐ.தே.கட்சி புதிய அமைப்பாளரான M.N. நஷ்மி அவர்களை வரவேற்கும் முகமாகவும், கற்பிட்டி ஐ.தே.கட் சி ஆதரவாளர்களை அடுத்த தேர்தல்கள் பற்றி விழிப்புணர்வு படுத்தும் முகமாகவும் அமைந்திருந்தது.
இந்த விசேட பொதுகூட்டத்தில் புத்தளம் மாவட்டத்தின் ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுபினர் ரங்கே பண்டார, ஐ.தே.கட்சியின் வடமேல் மாகன சபை உறுப்பினரான கிங்ஸ் லால் மற்றும் புத்தளம் தேர்தல் தொகுதியின் ஐ.தே.கட்சி புதிய அமைப்பாளரான M.N நஷ்மி அவர்களும் விசேட பிரமுகர்களாக கலந்து கொண்டனர்.
இவர்களுடன் ஐ.தே.கட்சியின் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் அலாவுதீன் , கற்பிட்டி ஐ.தே.கட்சி கிளையின் மூத்த தலைவரான M.H முஹம்மத் (உஹது) மற்றும் சட்டத்தரணி S.A சப்ரி அவர்களுடன் ஐ.தே.கட்சியின் ஆதரவாளர்கள் பலர் கனதுகொண்டனர்.
0 Comments