சீனாவின் சின்ஜியாங் மண்டலத்தில் துர்கிக் மொழி பேசும் முஸ்லிம் உய்குர் இன
மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இந்த மாகாணத்தில் பிரிவினைவாதவாதிகள்
அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இங்கு சீனாவின் மிகப்பெரிய மசூதி
அமைந்துள்ளது.
கடந்த ஜூலை மாத இறுதியில் ஒருநாள் இந்த மசூதியில் தொழுகை
நடத்திக்கொண்டிருந்த பிரபல இமாம் ஜுமா தையிர் 3 வாதிகளால் வெட்டிக்கொலை
செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் பின்னர் சுட்டுக்கொன்றதுடன்,
3-வது நபரான நர்மமட் அபிதிலியை கைது செய்தனர். இவருடன், கேனி ஹாசன்,
அடவுல்லா தர்சன் ஆகிய 3 பேர் மீது காஸ்கர் நடுத்தர மக்கள் நீதிமன்றத்தில்
விசாரணை நடந்து வந்தது.
இந்த விசாரணை அனைத்தும் முடிவுற்ற நிலையில் நர்மமட் அபிதிலி, கேனி ஹாசன்
ஆகிய 2 பேருக்கும் நேற்று தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அடவுல்லா
தர்சனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்ட
ஐனி ஐஷான் என்ற 18 வயது குற்றவாளி குறித்து இந்த தீர்ப்பில் எதுவும்
கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments