ஊவா மாகாண சபை தேர்தலைத் தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சிக்கு பொது மக்கள் ஆதரவு அதிகரிக்கத் தொடங்கியிருப்பதில், தற்போது அரசுடன் இணைந்திருக்கும் இ.தொ.கா, மற்றும் மு.கா ஆகியவை அரசை விட்டு விலகி ஐ.தே.க பக்கம் சாயவும், எதிர்வரும் தேர்தல்களில் ஐ.தே.கவுக்கு ஆதரவை தெரிவிக்கும் வியூகத்தில் இப்பொழுது ஈடுபட்டுள்ளதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
இதன் காரணமாகவே நேற்று (24), ஊவா மாகாண சபை ஐ.தே.க முதன்மை வேட்பாளராக போட்டியிட்டு அதிகப்படியான விருப்பு வாக்குகளை பெற்ற ஹரின் பெர்னாண்டோ நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், இந்த இரண்டு கட்சிகளும் ஐ.தே.க ஆதரவு தர முடிவு செய்தால் முன் நிபந்தனையுடனேயே இவர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள ஐ.தே.க தலைமை முன்வரவேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருப்பதாக தெரியவருகின்றது.
அரச சலுகைகளுக்காகவும் அமைச்சர் பதவிகளுக்காகவும் இந்த இரு கட்சிகளும் எதையும் செய்யும் என்று அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
நன்றி: dailyceylon
/Az
0 Comments