Subscribe Us

header ads

இலங்கை மக்களின் பிரதான கட்சிகள் ஐ.தே.க.வும் ஸ்ரீ.ல.சு.க.வும் மட்டும்தான் - ரனில் கூறுகின்றார்

இலங்கை நாட்டின் பிரதான அரசியல் பிரவாகங்களாக இந் நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டுள்ள கட்சிகள் ஐ.தே.க.வும் ஸ்ரீ.ல.சு.க.வும் மட்டும் என்று ஐ.தே.க.வின் தலைவரும் எதிர் கட்சித் தலைவருமான ரனில் விக்கிரமசிங்க கூறுகின்றார். 
நடந்து முடிந்த ஊவா மாகாண சபைத் தேர்தலில் தனியொரு அரசியல் கட்சியாக 40% வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் ஆற்றல் ஐ.தே.க.விடம் இருந்ததென்றும் பல கட்சிகளுடன் கூட்டனி சேர்ந்து ஸ்ரீ.ல.சு.க. அதிகப்படியான வாக்குகளைப் பெற்றது என்றும் அவர் கூறுகின்றார். நேற்று முன்தினம் நடைபெற்ற ஐ.தே.க.வின் உயர் பீட கூட்டத்தில் உரையாற்றும்போது ரனில் இவ்வாறு தெரிவித்தார்.
ஸ்ரீ.ல.சு.க. முன்னைநாள் பிரதம மந்திரி எஸ்.டப்.ஆர்.டி. பண்டாரநாயக்காவினால் உருவாக்கப்பட்ட கட்சியாகும். பௌத்த சமயத்துக்கும் சிங்கள மொழிக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்ற கோஷத்துடன் 1956-இல் ஆட்சியமைத்தார். 1959.09.26-ம் திகதி பௌத்த பிக்கு ஒருவரினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
rivira
/Az

Post a Comment

0 Comments