Subscribe Us

header ads

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக சஜித், உப தலைவராக ரவி


ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவை அந்த கட்சியின் செயற்குழு ஏகமனதாக நியமித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் தற்போது நடைபெற்று வருகின்ற கட்சி செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரதித் தலைவர் பதவிக்கு சஜித் பிரேமதாஸவை நியமிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், தேசிய தலைவருமான ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்துள்ளார்.

இந்த யோசனைக்கு ஆட்சேபனை ஏதும் உள்ளதா என செயற்குழுவிடம் வினவப்பட்டபோது, எவரும் ஆட்சேபனைகளை தெரிவிக்கவில்லை.
இதற்கமைய ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ அந்த கட்சியின் செயற்குழுவினால் ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை நியமிப்பதற்கு கட்சி செயற்குழு தீர்மானித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி பொதுச் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினரான அகில விராஜ் காரியவசமும், கட்சியின் பொருளாளராக இரான் விக்ரமரட்னவும் கட்சி செயற்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அத்துடன் சிரேஷ்ட உப தலைவராக ரஞ்சித் மத்தும பண்டாரவும், தேர்தல் தொடர்பிலான செயலாளராக தலதா அதுகோரளவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஹரீன் பெர்னாண்டோ தேசிய இளைஞர் முன்னணித் தலைவராகவும், மத்திய செயற்குழு உறுப்பினராகவும் இருவேறு பதவிகளுக்குத் தெரிவாகியுள்ளார்
-AsM-

Post a Comment

0 Comments