பயிற்சிநெறியின் 2-ம் நாளில் 2014.09.23-ம் திகதி மு.ப. 10.00 மணி முதல் ‘சமூக ஊடகங்கள்’ தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலில், ‘சமூக ஊடகங்களில் ஷரீஆத் துறை மாணவர்களின் ஆளுமை’ என்ற பிரதான தலைப்பின் கீழ் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
- சமூக ஊடகங்களின் நலனும்; கேடும்,
- கடவுச்சொல் (Password)களைப் பாதுகாத்தல்,
- அழகியல் கலைகளை இஸ்லாமிய பெறுமானங்களுடன் முன்வைப்பதன் அவசியம் தேவைப்பாடு,
- சர்ச்சையான தலைப்புக்களின்போது கையாள வேண்டிய உபாயங்கள்
குறித்து மாணவர்களின் கருத்துக்களின் ஊடாகக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. சமூக ஊடகங்களில் ‘சுய சந்தைப்படுத்தல்’ (self-marketing) இஸ்லாமிய அழைப்புப் பணியுடன் தொடர்புபடும் விதமும் கலைந்துரையாடப்பட்டது. இவ் அமர்வின் வளவாளராக The Puttalam Times சமூக ஊடகத்தின் நிருவாகிகளில் ஒருவரான (இக் கட்டுரையாளன்) பணியாற்றினார்.
“மத்ரஸா பாடவிதாணங்களுடன் புறக் கிருத்தி செயற்பாடாக இப் பயில்நெறி ஏற்பாடு செய்யப்பட்டது. ஷரீஆத்துறை மாணவர்களின் திறன்கள் ஆற்றல்கள் அவர்களுக்கு இனங்காட்டப்பட வேண்டும். அவற்றைத் தாமாக வளர்த்துக்கொள்வதற்கான வழிகாட்டல்களும் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் தற்காலத்தில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கும் சவால்களுக்கும் இந்த மாணவர்களால் முகங்கொடுக்கக் கூடியதாகவும் தஃவாப் பணியின் பங்காளர்களாகவும் இருக்க முடியும் என்பதை நோக்காகக்கொண்டு இப் பயில்நெறி ஏற்பாடுசெய்யப்பட்டது” என பயில்நெறியின் இணைப்பாளர் அஷ்ஷெய்க் ஆசாத் ஷிராஸ் (நளீமி) The Puttalam Timesக்குத் தெரிவித்தார்.
தொகுப்பு: Hisham Hussain
படங்கள்: Mohamed Azmath
நன்றி: The Puttalam Times
/Az
![]() |
| Hisham Hussain |





0 Comments