Subscribe Us

header ads

சீன ஜனாதிபதி இன்று இலங்கை வருகிறார்!


இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (16) இலங்கை வரும் சீன ஜனாதிபதி ஹிஜின் பிங்கிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்கா ஞாபகர்த்த சர்வதேச விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்படும்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையம் சென்று சீன ஜனாதிபதியை வரவேற்பார்.
சீன ஜனாதிபதி ஒருவர் 28 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு வருகை தருகிறார். அவரின் விஜயத்துடன் இரு நாடுகளுக்குமிடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட இருப்பதாக வெளிவிவகார அமைச்சு கூறியது.

சீன ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தின்போது 500 ஏக்கர் துறைமுக நகரத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும் இடம்பெறும். இந்த திட்டம் 1400 மில்லியன் அமெரிக்க டொலர் சீன கடனுதவியுடன் முன்னெடுக்கப்பட இருப்பதோடு அது தொடர்பான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட இருப்பதாக துறைமுக, நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்தது.

கடலை நிரப்பி காலிமுகத்திடலுக்கு அப்பால் இந்த துறைமுக நகரம் உருவாக்கப்பட இருப்பதோடு சைனா கொன்ஸ்ட்ரக்சன் கொமுயுனிகேசன் கம்பனி பிரதான முதலீடு மேற்கொள்கிறது.

சீன ஜனாதிபதி இங்கு தங்கியிருக்கும் இரு நாட்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் டி. எம். ஜயரத்ன, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஆகியோரை சந்திப்பார்.

சீன ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தின்போது இரு நாடுகளுக்குமிடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வாய்ப்பு இருப்பதாக பிரதி நிதி அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
 
நன்றி: news.lk
-AsM-

Post a Comment

0 Comments