Subscribe Us

header ads

அல்-கைதாவினது அறிக்கையும்,இலங்கையும்...!!

(துறையூர்ஏ.கே மிஸ்பாஹுல்ஹக்)


தெற்காசிய நாடுகளான இந்தியா,இந்தனோசிய,பர்மா போன்ற நாடுகளில் தனது  கிளையை நிறுவ உள்ளதாக அல்-கைதா மைப்பின்தலைவர்அ ய்மன்அல்- ஜவாகிரியின்அறிவிப்பானது பல தெற்காசிய நாடுகளிற்கும் "வயிற்றிற்குள் புளியைக்கரைத்தாய்ப்போலான" செய்தியாய்அமைந்தாலும்வெளியில் காட்டிக்கொள்ளாது அல்-கைதாவை எதிர்கொள்ள பல நாடுகளும் தயாராகி வருகின்றன.

இலங்கை நாட்டை தனது பேச்சினுள்அல்-கைதா அமைப்பின்தலைவர் குறிப்பிட்டு உள்ளடக்காது போனாலும் "தெற்காசியாவில்தங்களது கொடியை பறக்க விடுவோம்" என்ற அய்மன்அல்ஜவாகிரியின்கூற்று இலங்கைக்குப் பொருந்துவதாலும்இந்தியாவிற்கு ஏற்படுகின்ற தாக்கம் இலங்கையையும் பாதிக்கும்என்ற காரணத்தாலும்இலங்கையும்அல்கைதா அமைப்பை எதிர்கொள்ள தயார்என இலங்கை இராணுவப்பேச்சாளர்உட்பட பல முக்கியஸ்தர்களும்கூறி வருகின்றனர்.

எது எவ்வாறு இருப்பினும்ஆதாரம்எதனையும்முன் வைக்காது "இலங்கையில்இஸ்லாமிய ஜிகாத்உள்ளது,அதனை மத்ரசாக்கள் உருவாக்குகின்றன ,அதனை அரசு தடுக்க வேண்டும்"என உளறிக்கொண்டு திரிந்த பொது பல சேனா அமைப்பிற்கு அல்-கைதாவினது இவ்அறிக்கை தங்களது ஜிகாத்கூற்றை மக்களிடம்நிரூபிக்க சாதகமாக அமைந்துள்ளது.

பேரின மக்களும் "என்னடா?பொது பல சேனா அமைப்பு இவ்வளவு நாளும் நம்மட கத்தினது இதுகள வச்சித்தானாய்க்கும்டா,நாம கொஞ்சமாவது காது கொடுத்தமா?? " என சிந்தனை கொண்டு பொது பல சேனா அமைப்பின்பக்கம் பேரின மக்கள்சாயவும்,அதனுடைய ஏனைய இது தொடர்பான கருத்துக்கள் மக்களிடம்செல்வாக்குச்செலுத்தவும்இவ்அறிக்கை வித்திடும்.

பொது பல சேனாவின்ஜிகாத்பற்றிய கூற்றுக்களில்அரசாங்கம்அதிக கரிசனை கொள்ள பேரினத்தைச்சேர்ந்த பொது மக்கள்,ஜாதிக கெல உறுமய,தேசிய சுதந்திர முன்னணி போன்ற இனவாதக்கட்சிகள்,அரசாங்கத்தில்அங்கம் வகிக்கும்இனவாத உறுப்பினர்களால்அரசாங்கம்மிகையாக உந்தப்படும் என்பதில்ஐயமில்லை.

இதன்விளைவாக பொது பல சேனாவின்இது தொடர்பான விடயங்களை வைத்துப்பார்க்கும்போது ஸ்ரீலங்கா தௌஹீத்ஜமாத்,மத்ரசாக்கள்குறி வைக்கப்படலாம்என்றே எண்ணத்தோன்றுகிறது.

அல்-கைதாவின்இவ்அறிக்கையைத்தொடர்ந்து பொது பல சேனா "தாங்கள் படித்து படித்து சொன்னோமே!கேட்டிங்களா??" என்ற பாணியில்வீறு கொண்டு அறிக்கைகள்விட ஆரம்பித்துள்ளது மாத்திரமின்றி முஸ்லிம்களின்ஆதிக்கம் சற்று மிகைத்துள்ள,இஸ்லாமிய கற்கை நெறிகள்பல உள்ள ஒரே ஒரு பல்கலைக்கழகமான தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தினுள்ளும்இதனைப் பயன்படுத்தி உள்நுழைந்து தங்களது குழப்பத்தை அரங்கேற்ற பார்வையை குற்றி இருப்பது மிக வேதனைக்குரிய விடயமாகும். 

தற்போது பாக்கிஸ்தானிய அகதிகள்மீதான கடும்போக்கு குறி வைப்பின் பின்னணியும்அல்கைதாவின்அச்சுறுத்தலின்எதிரொலி என்றே கூற வேண்டும். அண்மையில்கோத்தாபாய ராஜபக்ச கூட இலங்கையில்இஸ்லாமிய தீவிரவாத அச்சுறுத்தல்உள்ளதாக கூறி இருந்தார்.


இதனை பல முஸ்லிம்அரசியற் பிரமுகர்கள்,முக்கியஸ்தர்கள்உட்பட பலரும்எதிர்த்திருந்தனர்.இனி என்ன?? அவர்கள்பாட்டுக்கு கதை புனைந்து அறிக்கை விட்டாலும்எதுவும்பேச முடியாத நிலைக்கு இவ்அறிக்கை முஸ்லிம்களை கொண்டு சேர்த்துள்ளது.

அளுத்கமை.தர்கா டவுன்கலவரம்,தொடரும்முஸ்லிம்கள்மீதான காழ்ப்புணர்வுச்செயற்பாடுகள்இலங்கையில்அல்-கைதா அமைப்பின் தடம்பதித்தலுக்கு அதிக சாதகமாக அமையும்.

எனவே,இலங்கை அரசானது இவற்றிக்கெல்லாம்அழகாகான தீர்வுத்திட்டங்களை முன்வைப்பதன் மூலமும்,இவைகள்மூலம்முஸ்லிம்கள்அடைந்த வடுக்களுக்கு சிறந்த மருந்திடுவதன்மூலமும்அல்கைதாவின்தடம்பதித்தலுக்கு ஏதுவான காரணிகளை இல்லாது ஒழிக்காலம்.

இவ்அறிக்கையைத்தொடர்ந்து பொது பல சேனா போன்ற அமைப்புக்கள் இதை வைத்தே பிரச்சாரங்கள்செய்து,மக்களை தங்களது வசம்இழுத்து  முன்பை விட முஸ்லிம்கள்மீது மிகக்கடும்போக்கு வாதத்தை திணிக்க தயாராகி வருவது போன்றே அதனுடைய தற்போதைய சில செயற்பாடுகள்

வெளிப்படுத்தி நிற்கிறது .இவ்வாறு மிகக்கடும்போக்கு வாதங்கள்மென் மேலும்முஸ்லிம்கள்மீது திணிக்கப்படுமாக இருந்தால்அல்கைதா அமைப்பின் தடம்பதித்தலுக்கு சிறந்த அடித்தளமாக அமையுமே தவிர முஸ்லிம்கள்மீதான அடக்கு முறை அல்கைதாவிற்கு ஒரு போதும்தடையாக அமையாது என்பதே உண்மை.ஈராக்மீது அமேரிக்கா போர்தொடுத்ததே,நலிவடைந்து காணப்பட்ட அல்கைதாவிற்கு புத்துணர்வு வழங்கியது என பலரும்ஆரூடம்தெரிவித்து வருவதே இதற்கான அழகிய வரலாற்றுச்சான்றாக முன்வைக்கலாம்.

அளுத்கமை,தர்கா டவுன்பிரச்சனைகள்இஸ்லாமிய அமைப்புக்களின் ஊடுருவலுக்கு வித்திடும்என அறிந்த அரசு,மேல்மாகாணசபை உறுப்பினர்  முஜிபுர்ரஹ்மான்உட்பட பலரினது மேல்தனது சந்தேகப்பார்வையைக் குற்றி விசாரணைக்கு உட்படுத்தி இருந்தது.இப்போது இதனை தனக்கு சாதகமாய்பயன்படுத்தி தனது வெற்றி வாய்ப்புக்கள்நலிவடைந்து சென்று கொண்டிருக்கும்தற்காலத்தில்,தனது வெற்றியை உறுதிப்படுத்திக்கொள்ள அசாத்சாலி போன்ற முஸ்லிம்களுக்காக அரசுக்கெதிராக குரல்கொடுத்து அரசை நலிவடையச்செய்து கொண்டிருக்கும்சில அரசியல்முக்கிய புள்ளிகள் குறிவைக்கப்பட்டு விசாரணை,கைது போன்ற நடவடிக்கைகளால் அடக்கும் வழி முறைகள்நாட்டில்அரங்கேரினாலும்ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Post a Comment

0 Comments