டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு ஏதுவான யோகட்கப், சிரட்டை, வெற்று ரின் கள், டயர், நீர்தேங்கக்கூடிய சட்டிகள் ஆகியவற்றை விலை கொடுத்து வாங்கி அழிக்கும் நடவடிக்கையை எதிர்வரும் அக்டோபர் முதல் நடைமுறைப்படுத்த கொழும்பு மாநகரசபை தீர்மானித்துள்ளது.
பாடசாலை மாணவர்களைக் கொண்டு இவற்றைச் சேகரித்து ஒரு பொருளுக்கு ஒரு ரூபா வீதம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபை சமூக அபிவிருத்தி சங்கத்தின் மூலம் இத் திட்டம் நடைமுறைப்படுத்தவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவிக்கின்றார்.
200 மாணவர்களைத் தெரிவுசெய்து வீடு வீடாகச் சென்று இவற்றினைச் சேகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


0 Comments