Subscribe Us

header ads

(வீடியோ இணைப்பு) ஹாலி-எல பிரதேசத்தில் ஹரின் பெர்ணான்டோ மற்றும் குழுவினர் மீது தாக்குதல்.


ஐக்கிய தேசியக்கட்சியின் ஊவா மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்ணான்டோவின் வாகனத்தின் மீது ஹாலி-எல பிரதேசத்தில் வைத்து கல்வீச்சுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹாலி-எல பொலிஸ் சோதனை சாவடிக்கு அருகில் வைத்தே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சம்பவத்தில் வாகனங்களுக்கு சேதமும் மற்றும் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 சம்பவத்தில் ஊடகவியாளர் சிலரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆதரவாளர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தாக்குதலை தொடர்ந்து ஹரீன் பெர்னாண்டோ இது தொடர்பில் பதுளை போலீசில் முறையிட்ட தாகவும் , தாக்குதல் நடத்த வந்தவர்கள் பொல்லு, வாள்  வைத்திருந்ததாகவும் மேலும் தெரிய வருகிறது.

Thanks; news1st anf madawalanews.com

Post a Comment

0 Comments