(முள்ளிப்பொத்தானை ஜபருல்லாஹ்)
“கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்று நமது முன்னோர்கள் நமக்கு சொன்னதை நாம் எத்தனை பேர் கடைப் பிடித்திருக்கிறோம்.சொன்னால் இந்தக் காலத்தில் பிச்சை எடுத்துக் கல்வி கற்பதா? என்று கேட்பீர்கள்.
நமக்கு சொன்ன இந்த வார்த்தைகளை நாம் பின்பற்றுகிறோமோ இல்லையோ இந்த வார்த்தைக்கு பெருமை சேர்க்கும் வகையில் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் (Beijing) வசிக்கும் முதியவர் (65) ஒருவர் இதனை இப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறார்.
இவர் அப்பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்து சேரும் பணத்தை மாதந்தோறும் அங்குள்ள அஞ்சலகத்தின் மூலம் தனது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறார்.
இதுகுறித்து அஞ்சலக ஊழியர்கள் கூறுகையில், மாதம் தவறாமல் தான் பிச்சை எடுத்த பணத்தை எங்கள் அலுவலகத்திற்கு இவர் கொண்டுவருவது வழக்கம் என்றும், ஒரு மாதத்திற்கு மட்டும் சுமார் 10,000 ரென்மிம்பிகள் (Renminbi) (இலங்கை நாணயப் பெறுமதியின் படி சுமார் ரூ.212௦௦௦/-) சம்பாதிப்பார் எனவும் வெகு காலமாக பிச்சை எடுத்து வரும் இவர், சொந்த ஊரில் வீடு கட்டியுள்ளதுடன் 3 மாணவர்களின் கல்லூரி படிப்புக்கும் உதவுகிறார் என்று கூறியுள்ளனர்.
தான் பிச்சை எடுத்தாலும் தன் சந்ததிகள் கல்விமான்களாக வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இந்த முதியவர் போற்றத்தக்கவர்.
M.N


0 Comments