-ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்-
சமூகத்தின் மத்தியில் சிறுவர் துஸ்பிரயோகம்,...Child in a Physical, Sexual and Emotional Abuse in the Surrounding Environment.
ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு... செய்தி சிறுமி துஷ்பிரயோகம், சிறுமி மீது
தாத்தா சேஷ்டை என்று விதவிதமான திடுக்கிடும் தகவல் கலந்த தலைப்புக்களுடன்
நிச்சயம் ஒவ்வொரு நாளும் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.
இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள், நாட்டின் கண்கள், எதிர்காலத்தின்
தூண்கள் என்றெல்லாம் போற்றிக் கொண்டிருக்கும் அதேவேளை மறு பக்கம்
துஷ்பிரயோகக் கலாசாரம் பூதாகரமாக வளர்ச்சியடைந்து நாளைய தலைவர்களை இன்றே
நாசம் பண்ணிவிடுமோ என்ற அச்சம் தலைவிரித்தாடுகின்றது. காமவெறி பிடித்த
அரக்கர்களின் உடற் பசிக்கு எமது சின்னஞ்சிறு மொட்டுக்கள் பலியாவதை
நினைக்கும் போது நல்ல இரத்தம் ஓடும் எந்தவொரு மனமும் பதராமல் இருக்காது.
சிறுவர்பாலியல் துஷ்பிரயோகம் என்பது ஒரு பிள்ளைக்கும் வயது வந்தவர்
ஒருவருக்குமிடையில் அல்லதுவயதில் மூத்த பிள்ளைக்குமிடையில் ஒரு நபருடைய
தேவையை அல்லது விருப்பத்தை திருப்திப்படுத்துவதற்காக நிகழ்வதாகும். சிறுவர்
துஷ்பிரயோகம் என்பது‘ தவிர்க்கக் கூடிய சாதாரண காமத்தினை அடிப்படையாக
கொண்ட மன உழைச்சல் எனவும் வரைவிலக்கண படுத்தப்படுகின்றது. அதில்பின்வருன
சேர்கின்றன.
01. சட்டவிரோதமானஎந்தவொரு பாலியல் நடவடிக்கையிலும் ஈடுபடபிள்ளையைத் தூண்டுதல் அல்லது பலவந்தப்படுத்தல்.
02. பிள்ளையைவிபச்சாரத்தில் அல்லது ஏனைய சட்டவிரோதமானபாலியல் நடவடிக்கைகளில் சுரண்டும் வகையில் பயன்படுத்தல்.
03. துஷ்பிரயோகஆபாச செயல்களில் அல்லது பொருட்களில் பிள்ளைகளைசுயநலம்பெறும் வகையில் பயன்படுத்தல்.
சிறுவர்கள் மனிதப் பிறவிகள் என்ற வகையில், மனித உரிமைகள் அனைத்தும்
சிறுவர்களுக்கும் உரித்தானதாகும். சிறுவர் உரிமைகளிலிருந்தே மனித உரிமைகள்
தோற்றம் பெற்றள்ளன. சிறுவர் உரிமைகள் என்றால் சிறுவர்களுக்கு சிறப்பான
வாழ்க்கை வாழ்வதற்கு அவசியமான நிபந்தனைகளே சிறுவர் உரிமைகளாகும். அதாவது
சமூகத்தில் சிறுவர்களுக்கு உரித்தாக வேண்டிய வரப்பிரசாதங்கள் சிறுவர்
உரிமைகளாகும். பிரத்தியேகமான முறையில் சிறுவர்களுக்கேயுரியவை என்று சர்வதேச
ரீதியாக ஜக்கிய நாடுகள் தாபனத்தால் ஏற்று அங்கீகரிக்கப்பட்ட உரிமைகள்
சிறுவர் உரிமைகளாகும்.
இதையும் தாண்டி இன்றைய உலகு பலவிதமான புதிய பிரச்சினைகளை நாளுக்கு நாள்
சந்தித்துக் கொண்டேயிருக்கிறது. அதில் அன்மைக் காலமாக உலகையே உலுக்கிக்
கொண்டிருக்கும் ஒரு மாபாதகத் செயலாக மாறியிருப்பது “சிறுவர் துஷ்பிரயோகம்”
என்ற சிறுவர் பாலியல் துன்புறுத்தலாகும்.அண்மையில் இலங்கையின் காத்தான்குடி
பகுதியில் 08 வயதான பாத்திமா சீமா என்ற சிறுமி சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு
உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் பலத்த பரபரப்பையும்
சிறுவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த
வேண்டியதின் அவசியத்தையும் மீண்டும் ஒரு முறை நினைவூட்டியுள்ளது.
இவைகள் சமூகத்தில் எவ்வாறு நடந்தேறுகின்றன எனப்பார்ப்போமானால்., காம வெறி
பிடித்த அயோக்கியர்கள், சிறுவர்களையும் வளர்ந்த பெண்களைப் போன்று எண்ணி
அவர்களின் முன், பின் துவாரங்களில் உடலுறவில் ஈடுபடுகின்றார்கள்.
இப்படிப்பட்ட இவர்களின் தீய நடத்தையினால் உடலியல் மற்றும் உணர்வு ரீதியாக
குழந்தைகள் பாதிக்கப்பட்டு அவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும்.
குழந்தைகளுடன் விளையாடுபவர்கள் அல்லது உங்கள் குழந்தைகள் மீது அன்பு
பாராட்டுவதைப் போன்று நடிக்கும் குற்ற உணர்வு படைத்தவர்கள் பிள்ளைகளின்
அந்தரங்க உருப்புகளை தொட்டு விளையாடக் கூடும். இதை அவர்கள் விளையாட்டாக
செய்வதாக நாம் எண்ணிக் கொள்வோம். ஆனால் குற்ற உணர்வுடன் பிள்ளைகளை அனுகும்
இவர்கள் கண்டிப்பாக பாலியல் ரீதியிலான தூண்டுதலின் காரணமாகத் தான் இவ்வாறு
செய்வார்கள். இதனை பெற்றோர்கள்
கவனித்துக் கொள்ள வேண்டும்.
பெற்றோர்கள் இல்லாத நேரத்தில், அல்லது பெற்றோர்களுக்குத் தெரியாமல்
துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் இத்தகைய ஆசாமிகள் சிறுவர்களை பாலியல்
வல்லுறவுக்கு (உடலுறவுக்கு) உட்படுத்துகின்றார்கள். இப்படி பாலியல்
ரீதியில் குழந்தைகளை உடலுறவுக்கு உட்படுத்துபவர்கள் ஆண் குழந்தைகளை பின்
துவாரம் வழியாகவும், பெண் குழந்தைகளை முன் துவாரம் வழியாகவும் இத்தகைய
செயல்பாட்டுக்கு உள்ளாக்குகின்றார்கள். சிறுவர்களை பாலியல் வல்லுறவுக்கு
உட்படுத்தும் போது சிறுவர்களின் பலமில்லாத உடம்பு அதனை தாங்கிக் கொள்ளாத
காரணத்தினால் பலவிதமான நோய்களுக்கும் அவர்கள் ஆளாகின்றார்கள். அது
மட்டுமன்றி பிள்ளைகளின் முன் பின் துவாரங்களும் பாதிக்கப்பட்டு அவர்கள்
நிறந்தர நோயாளிகளாக மாறுவதுடன், சில நேரங்களில் மரணமடைவதற்கும்
வாய்ப்புண்டு. பொதுவாக எந்தக் குழந்தையானாலும் யாராக இருந்தாலும் அவர்கள்
கண்ணத்தில் முத்தம் கொடுப்பதை ஏற்றுக் கொள்வார்கள். இது தவிர்ந்த இடங்களில்
தாய், தந்தையல்லாதவர்கள் முத்தம் கொடுப்பதை பொதுவாக எந்தக் குழந்தையும்
ஏற்றுக் கொள்வதில்லை.
சிறுவர்களை பாலியல் ரீதியில் அணுக நினைக்கும் அயோக்கியர்கள். அவர்களின்
தொப்புல், மர்ம உறுப்பு, பித்தட்டு போன்ற இடங்களில் முத்தம் இடுவதில் அதிக
ஆர்வம் காட்டுவார்கள். இப்படி தொடர்ச்சியாக யாராவது நடப்பதை பெற்றோர்களோ
அல்லது பாதுகாவலர்களோ அவதானித்தால் அவர் விஷயத்தில் கவணமாக செயல்பட
வேண்டும். குழந்தையுடன் தொடர்பில்லாத தாய், தந்தை உறவினர்கள் போன்றவர்கள்
தவிர்த்து காரணமில்லாமல் யாராவது குழந்தையின் ஆடைகளை கலற்றுகின்றார்களா
என்பதில் கவணமாக இருக்க வேண்டும். குழந்தை சிறு நீர் கழிக்க வேண்டும்
என்பதற்காக அல்லது மலம் கழிக்க அல்லது குழிக்க வேண்டும் என்பதற்காக யாராவது
ஆடையை தாய், தந்தையின் அனுமதியுடன் கலற்றி விட்டால் பிரச்சினையில்லை.
மாறாக சம்பந்தமில்லாமல் ஆடையை யாராவது கலற்றினால் அல்லது கலற்ற முற்பட்டால்
அவர் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
குழந்தைகளுடன் பேசும் போது ஆபாசமாக பேசுதல், ஆபாசமாகப் பேசத் தூண்டுதல்,
இரட்டை அர்த்தத்தில் பேசுதல் போன்ற செயலிலும் இந்தக் காமக் கொடூரர்கள்
ஈடுபடுகின்றார்கள். இப்படி யாராவது பிள்ளைகளுக்கு மத்தியில் நடந்து
கொண்டால் அவர்கள் விஷயத்திலும் கவனம் செலுத்தப்படல் வேண்டும்.
விஞ்ஞானத்தின் வளர்சியின் உச்சகட்டமாக இன்று செல்போன் கலாச்சாரம்
அதிகரித்துக் காணப்படுகின்றது. மட்டுமன்றி இந்த செல்போன்களிலேயே ஆபாச
வீடியோக்கள் புகைப்படங்களை சேமித்து வைக்கக் கூடிய வசதிகளும் இன்று அதிகமாக
வழங்கப்பட்டுள்ளன. இப்படிப் பட்ட நேரத்தில் நமது பிள்ளைகள் யாரோடு தொடர்பு
வைத்துள்ளார்கள் என்தை அறிந்து கொள்ளுங்கள், அவர்கள் தொலை பேசி
பயன்படுத்தினால் அவர்களின் கைத் தொலை பேசியில் “மெமரி காட்” போன்றவை
இருக்கிறதா? இருந்தால் அதில் அவர்கள் எதனை பதிவேற்றம் செய்து
வைத்துள்ளார்கள் போன்ற விபரங்களை அடிக்கடி அறிந்து கொள்ளப்படல் வேண்டும்.
இன்று அதிகமான பெற்றோர் சிறு பிள்ளைகள் தானே என்று குழந்தைகளின்
நடவடிக்கைகளில் கவனக்குறைவாக இருந்து விடுவார்கள். இதனால் அரக்கர்கள்
குழந்தைகளை இலகுவாக சீரழித்து விடுவார்கள். அதோபோன்று அவர்களது ஆடைகள்
விடயத்திலும் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். சிறுபிள்ளைதானே என்று
அங்கம் தெரிய உடுத்தி அழகு பார்க்கும் ஆடைகளே அவர்களுக்கு எமனாக அமைந்து
விடக்கூடும். உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்திலான ஆடைகளை சிறுவர்களுக்குக்
கூட அணிவிப்பதில் இருந்தும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
மேலும் குழந்தைகளைத் தனிமைப்படுத்துவதில் இருந்து முடிந்தவரை தவிர்த்துக்
கொள்ளவேண்டும். தனிமைப்படுத்தப் படும் போது அவர்கள் உணர்வு ரீதியாக
பாதிக்கப்படுவார்கள்.
குழந்தைகள் எப்போதும் அன்பையும் ஆதரவையும் எதர்பார்ப்பவர்களாகத்தான்
இருப்பார்கள். தனிமைப்படுத்தப்படும் போது பெற்றோர் பாதுகாவலர்களிடம்
இருந்து கிடைக்கும் அன்பும் அரவணைப்பும் அவர்களுக்கு இல்லமல் போகும்.
இச்சந்தர்பத்தில் அன்பும் அரவணைப்பும் யாரிடம் இருந்து கிடைக்கிறதோ
அப்பக்கம் குழந்தை இலகுவாகச் சார்ந்துவிடும்.
இவ்வாறான சந்தரப்பங்களில் அரக்கர்கள் குழந்தைகளை இலகுவாக சீரழித்து
விடுவார்கள். இனிப்புக்கள் விளையாட்டுப் பொருட்களைக் காட்டி குழந்தைகளின்
மனதை இலகுவாக மாற்றிவிடுவார்கள்.
அதே மாற்றத்தோடு மறு பக்கம் தொலைபேசி, இணையத் தளங்களின் மூலமும்
குழந்தைகளைக் குறிவைக்கின்றார்கள். விஞ்ஞான வளர்ச்சி உச்சகட்டத்தை அடைந்து
கொண்டு போகும் தற்காலத்தில் கைத்தொலைபேசிகள், கணினிகள் நன்மை பயக்கும் அதே
வேளை பயங்கர விளைவுகளுக்கும் அவை துணை போகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள
வேண்டும்.
தனது பிள்ளை தொடர்பு வைத்துள்ள நபர் யார்? அவர் எப்படிப் பட்டவர் என்பதில்
விழிப்புடன் இருக்க வேண்டும். தொடர்பு வைத்துள்ள நபர் அல்லது நண்பர்
சந்தேகத்துக்குரியவர் என்றால் அவருடனான தொடர்பை உடனே துண்டித்துக்
கொள்ளுமாறு கண்டிக்க வேண்டும். அதே போல் பிள்ளைகளின் கணனிகள், மடிக்கணனிகளை
அடிக்கடி சோதனைக்குட்படுத்த வேண்டும்.
இன்று அதிகமான வீடுகளில் குழந்தைகளுக்கென்று தனித்தனியான அறைகள்
காணப்படுகின்றன. இத்தகைய வீடுகளில் குழந்தைகள் அறையில் என்ன
செய்கின்றார்கள், எவ்வாறு நேரத்தைக் செலவளிக்கின்றார்கள் என்பதை பெற்றோர்,
பெரியவர்கள் அவதானமாக இருக்க வேண்டும். அதிகமான பெற்றோர் இதற்கு மாறாகவே
நடந்து கொள்கிறார்கள். பிள்ளைகளை கட்டுப்படுத்தக் கூடாது அவர்களை
சுதந்திரமாக விடவேண்டும் என்று எண்ணி விட்டுவிடுவார்கள். ஆனால் அதுவே
இறுதியில் இது பாரிய பிரச்சினைகளுக்குள் தள்ளிவிடும்.
அடுத்த மிக முக்கியமான விடயம் இன்று நமது பயிரை காப்பதற்கு நாம் கட்டிய
வேலியே பயிரை மேயும் சம்பவங்களையே நாம் அதிகமாகக் கேள்விப் படுகிறோம்.
பாடசாலை அதிபர்கள், தனியார் வகுப்பு ஆசிரியர்களால் பல மாணவர்கள்
சீரழிக்கப்பட்டதை அண்மைக்காலங்களில் ஊடகங்களில் வெளியான செய்திகளில்
இருந்து தெரிந்து கொள்ளலாம். இது விடயத்தில் மிக அவதானமாக இருக்க வேண்டும்.
தமது பிள்ளைகள் செல்லும் தனியார் வகுப்புக்கள் பாதுகாப்பானதா என்பதில்
பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்.*
சிறுவர்களை பாலியல் ரீதியில் துன்புறுத்துபவர்கள் தங்களுக்குச் சாதகமாக
ஏற்படுத்திக் கொள்ளும் காரணங்களாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம்…
1. சிறுவர்களின் பாதுகாப்பற்ற நிலைமை.
2. பெற்றோரின் கவனக்குறைவு.
3. பொருளாதார பலவீன நிலைமை
4. சிறுவர்களின் அறிவீனம்
5. பெற்றோரின் விவாகரத்து நடவடிக்கைகள்
6. தாய் தந்தையரின் வெளிநாட்டுப் பயணம்
7. பெற்றோர் கல்வியறிவின்மை
8. கையடக்க தொலைபேசிகள் மற்றும் இணைய தளங்கள்
9. மதுபானம் , போதைவஸ்து உபயோகம்
10. தனிமைப்படுத்தப்பட்டிருத்தல்
11. சிறிய சூழலில் நிறையப் பேர் இணைந்து வாழ்தல்.
இஸ்லாத்தின் பார்வையில் மிகச்ச்ருக்கமாக நபி (ஸல்) அவர்களின் கருத்தோடு இதனை பார்ப்போமானால்
ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள் என்று கூறிய நபியவர்களின் கருத்தை
பார்த்தோமானால், தாய், தந்தை இருவரையும் குறிப்பிட்டுக் கூறுகின்றார்கள்.
பிள்ளைகளை பாதுகாப்பதும் அவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுப்பதும்
தங்கள் குழந்தைகளுடன் யார் யார் தொடர்பு வைக்கிறார்கள் என்பதைக் கவணிப்பது
போன்ற அனைத்து செயல்கள் பற்றியும் நாளை மறுமையில் பெற்றோர்
விசாரிக்கப்படுவார்கள் அதனால் தங்கள் குழந்தைகள் விஷயத்தில் மிகவும் கவணமாக
இருக்க வேண்டும். அந்தரங்க நேரங்களில் அதாவது குறைவான ஆடைகளுடன் பெண்கள்
வீட்டுக்குள் இருக்கும் நேரத்தில் சிறுவர்கள் வீட்டுக்குள் நுழையும் போது
அனுமதி கேட்டு அனுமதியளிக்கப்பட்டவுடன் தான் வீட்டுக்குள் நுழைய வேண்டும்.
சிறுவர்களுக்கு முன்னால் பெண்கள் ஆடை மாற்றவோ, அல்லது குறைவான ஆடையுடனோ
இருக்கக் கூடாது. காரணம் சிறுவர்களாக இருந்தாலும் அவர்கள் பெண்களின்
அந்தரங்க இடங்களைப் பார்க்கும் விதமாக பெண்கள் இருக்கக் கூடாது. இதன் மூலம்
சிறுவயதில் இருப்பவர்களுக்கு பாலியல் ரீதியிலான தீய சிந்தனைகள்
உருவாகிவிடக் கூடாது என்பதில் இஸ்லாம் தெளிவான நிலைப்பாட்டில்
இருக்கின்றது. ஆகவே தூய இஸ்லாமே போதுமானது எல்லா கெட்ட செயல்களையும்,
வெறுத்தொதுக்கப்பட்ட சமூக சீர்கேடுகளையும் சமூகத்தில் இருந்து
இல்லாதொழிப்பதற்கு. இதனை இஸ்லாமியர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்ட
சிந்தனையாக பார்க்காது முழு உலக சமூதாயமூமே உண்மை நிலையை நடு நிலையாக
நின்று சிந்தித்து தெளிவினை பெற்றுக்கொள்ள வேண்டிய விடயமாகும்.
-AsM-



0 Comments