-யோ.வித்தியா, பொ.சோபிகா
யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியில் 8 வயது சிறுமியொருவரை பாலியல்
துஷ்பிரயோகம் செய்த தாத்தாவை (தாயின் தந்தை) ஞாயிற்றுக்கிழமை (14) காலை
கைது செய்ததாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சிறுமியை அவளது தாத்தா, தொடர்ந்து 9 நாட்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.
இனிப்பு பண்டங்களை வாங்கிக்கொடுத்து, அச்சிறுமியை துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர், இவ்விடயத்தை வெளியில் சொல்லவேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், தனது மகளில் மாற்றங்கள் இருப்பதை கண்டுகொண்ட தாய், மகளிடம் கேட்டபோது, தாத்தா தனக்கு செய்தவற்றை அச்சிறுமி கூறியுள்ளார்.
இதனையடுத்து, சிறுமியின் தந்தை சனிக்கிழமை (13), யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாட்டை பதிவு செய்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் சிறுமியை வைத்திய பரிசோதனை மேற்கொண்ட போது, சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (14) காலை, தாத்தா கைது செய்யப்பட்டதாகவும், தொடர்ந்து சிறுவர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

0 Comments