Subscribe Us

header ads

சவூதி அரேபிய தனது 83வது தேசிய தினத்தை கொண்டாடுகிறது. (படங்கள் இணைப்பு)


(M.S.M.பாயிஸ் - ஜித்தா, சவூதி அரேபியா)

நாளை 23.09.2014 செவ்வாய்க்கிழமை சவூதி அரேபியா  தனது 83வது தேசிய
தினத்தை கொண்டாடுகிறது.
தேசிய தினத்தை முன்னிட்டு முக்கிய தலை நகரங்களான ரியாத், ஜித்தா மற்றும் தமாம் நகரங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.

1932ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் திகது சவூதி அரேபியாவின் முதலாவது
மன்னர் அப்துல் அஸீஸ் அல் சவூத் அவர்களினால் இத்தினம்
பிரகனப்படுத்தப்பட்டு வருடம்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தேசிய தினத்தை முன்னிட்டு நாளை தேசிய விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நாளை சவூதி அரேபியா எங்கும் உள்நாட்டு விமான சேவை கட்டணமாக 83 ரியால்கள்
மட்டும் அறவிட சவூதி அரேபியன் எயார் லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.





Post a Comment

0 Comments