உத்திரபிரதேச மாநிலத்தில் முதியவர் ஒருவர் மீசையை நீளமாக வளர்த்து உலக
சாதனை படைத்துள்ளார். உத்திர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ஆக்ராவில் ராம்
சந்த் குஷ்வாஹா (65) என்ற முதியவர் கிட்டதட்ட 17 அடி நீளத்திற்கு மீசையை
வளர்த்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்த மீசைக்காக நான் கடந்த
25 ஆண்டுகளாக சவரன் செய்து கொள்ளவில்லை என்றும் முகத்தில் இருந்த முடியை
வைத்தே 8 என்ற எண்ணை உருவாக்கியவரே எனது இந்த முயற்சிக்கு வழிகாட்டியாக
இருந்தார் எனவும் தெரிவித்துள்ளார். இவரைக் குழந்தைகள் மீசைக்காரத்தாத்தா
அல்லது மீசைக்கார மாமா என்று தான் செல்லமாக அழைக்கின்றார். மேலும் தனக்கு
கின்னஸில் எவ்வாறு இடம்பெறுவது என்பது பற்றி தெரியவில்லை என அவர்
குறிப்பிட்டுள்ளார். இந்த மீசையால் உணவு உண்ண இயலாத ராம் சந்த் வெறும் பால்
மட்டுமே அருந்தி உயிர்வாழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments