பிரான்ஸில் இவ்வாண்டுக்கான உயர்நிலைப் பள்ளி பாக்லோரியட் தேர்வில் அதிகமான
மதிப்பெண்களை பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார் மொராக்கோவிலிருந்து
பிரான்ஸில் குடியேறிய முஸ்லிம் மாணவி. இவரது பெயர் மர்யம் புர்ஹைல்.
பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ குடியுரிமை இவருக்கு உண்டு. மர்யமின் வெற்றி இரு
நாடுகளிலும் உள்ள ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.
தொழிற்சாலையில் பணியாற்றும் முஹம்மது, இல்லத்தரசியான நாதியா ஆகியோரின்
மகளான மர்யம், கடின முயற்சியும், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின்
ஊக்குவிப்பே தனது வெற்றிக்கு காரணம் என்று கூறுகிறார். பிரான்ஸ்
மட்டுமல்லாது 85 நாடுகளைச் சார்ந்த 6,86,900 மாணவர்கள் இத்தேர்வை
எழுதியிருந்தனர்.
கல்வியில் தனது சாதனை முஸ்லிம் சமுதாயத்திற்கு ஊடக கவனத்தை
பெற்றுக்கொடுத்ததில் தான் அபிமானம் கொள்வதாக மர்யம் தெரிவித்தார்.
மருத்துவராகவேண்டும் என்பது மர்யமின் விருப்பம்.


0 Comments