காஸாவுடான யுத்த நிறுத்தத்தை நீடிப்பதற்கு இஸ்ரேல் முன்வந்துள்ள
நிலையில் ஹமாஸ் இயக்கம் அதனை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார்
ஒரு மாதமாக இடம்பெற்ற மோதல்களில் ஆயிரத்து தொள்ளாயிரம் பேர் வரை
பலியாகியுள்ள நிலையில் மூன்று நாள் யுத்த நிறுத்தம்
அமுல்படுத்தப்பட்டிருந்தது.
எனினும் இஸ்ரேலின் யுத்த நிறுத்த நீடிப்பை ஹமாஸ் இயக்கம் நிராகரித்துள்ளதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் குறிப்பிடுகின்றன.
எகிப்தின் மத்தியஸ்தத்துடன் இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்தற்கும் இடையில் கைய்ரோவில் பேச்சுவார்த்தைக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே
மேலும் நீடிக்க கூடிய யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்துவதற்கு வாய்ப்புகள்
உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
எனினும் இரண்டு தரப்பிலும் உள்ள அரசியல் தலைவர்கள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்என பரக்ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.
0 Comments