உலக தாய்ப்பால்
தினத்தை முன்னிட்டு கிரீன் சேவர் செரிடேபல் டிரஸ்ட்டின் பசுமை காப்பாளர்கள்
சார்பில் இந்திய தமிழ்நாடு வேலூர் மாவட்டம் அரக்கோணம் அரசு பொது மருத்துவனையில்
மரக்கன்றுகள் நாடும் விழா நடைபெற்றது.
கிரீன் சேவர் செரிடேபல் டிரஸ்ட் தலைவர் திருமதி கோட்டீஸ்வரி தலைமையில்
நடைபெற்ற விழாவில் துணை தலைவர் திருமதி புவனேஸ்வரி முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் திருமதி.
ஜீவா இளங்கோ மற்றும் வேலூர் மாவட்ட நாட்டுநல பணி தொடர்ப்பு அலுவலர் திரு.
அற்புதராஜ் அவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்கள். இதில் கிரீன்
சேவர் செரிடேபல் டிரஸ்ட்டின் பசுமை காப்பாளர்கள் ஒருங்கினைப்பாளர் சரவணன்,
வேலூர் மாவட்ட பொறுப்பாளர் பன்னீர்செல்வம் , சத்தீஷ், தயாளன், பிலிப்ஸ்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments