ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் அமைப்பினால் (ஜம்இய்யா) நாடு தழுவிய ரீதியில் நடாத்தப்பட்டுவரும் ரமழான் கால விசேட பயிற்சி நெறியான SAFTA இம்முறை எமது கற்பிட்டியிலும் இடம்பெற்றது. இப்பயிற்சி நெறி பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கற்/அல் அக்சா தேசிய பாடசாலையின் உதவி அதிபர் மௌலவி இப்ராஹிம் அவர்களது தலைமையில் ஜூலை 20, 2014 அன்று இடம் பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்
மேற்படி நிகழ்வில் மாணவர்கள் அனைவரும் இப்பயிற்சி நெறியால் தாம் பெற்றுக்கொண்ட பயன்கள் படிப்பினைகளை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தினர். இங்கு உரையாற்றிய உதவி அதிபர் மௌலவி இப்ராஹீம் அவர்கள் " தான் அறிந்தமட்டில், ‘தர்பிய்யத்’ என்றழைக்கப்படும் இப்பயிற்சி மாணவர்களுக்காக முதன்முறையாக கற்பிட்டியில் நடத்தப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான பயிற்சிகளின் அவசியத் தேவை குறித்தும் விளக்கினார்.






0 Comments