Subscribe Us

header ads

சரத் பொன்சேக்கா சுரண்டி வீசியெறியப்பட்ட அதிர்ஷ்டலாபச் சீட்டு! – டலஸ்

ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேக்கா இன்று சுரண்டி வீசியெறியப்பட்ட அதிர்ஷ்டலாபச் சீட்டாக விழுந்து கிடக்கின்றார் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிடுகிறார்.

“நாட்டைக் காக்கும் நீலக் காவலரணைப் பாதுகாப்போம்” எனும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்வு கலிகமுவ பிரதேசத்தில் இடம்பெற்றது.

சரத் பொன்சேக்காவுக்கு செய்யமுடியாததைச் செய்துகொள்ள சிலர், நாட்டினதும் எங்களினதும் கௌரவத்திற்குப் பாத்திரமான மாதுலுவாவே சோபித்த தேரரிடம் விழுந்து வணங்கினர்.

அன்று சிலரிடம் ஏமாற்றமடைந்த சரத் பொன்சேக்கா, ராஜபக்ஷவை 50% இற்குள் கொண்டுவந்து நிறுத்த முற்பட்டாலும் இன்று அவரால் ஒன்றும் செய்ய முடியாத செல்லாக் காசாகவே அவர் இருக்கின்றார். அவரால் முடியாததை சோபித்த தேரர் மூலம் சாதிக்க முயற்சிக்கின்றார் அவர் எனவும் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments