இனவாதம் வேண்டாம். சிங்கள, தமிழ், முஸ்லிம் எம்மை ஒன்றுமையாக வாழ விடு”
எனும் தொனிப்பொருளில் சோஷலிச இளைஞர் சங்கம் ஏற்பாடு செய்த கையெழுத்து
சேகரிக்கும் நிகழ்வு நேற்று (23-07-2014) மாலை கொழும்பில் இடம்பெற்றது.
நாட்டில் இன ஐக்கியத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் குறித்த அமைப்பு
முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களின் ஓர் அங்கமான இந்த இனவாதத்துக்கு எதிரான
கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னாள் இடம்பெற்ற இந்த
நிகழ்வில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு தமது கையெழுத்துக்களை பதிவு
செய்தனர்.
Thanks To: Daily Ceylon







0 Comments