யுக்ரேன் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் கறுப்புப் பெட்டிகள் மலேசிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மலேசிய
உயரதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட
உடன்படிக்கையின் பிரகாரம் யுக்ரேன் கிளர்ச்சியாளர்களால் இந்த கறுப்புப்
பெட்டிகள் கையளிக்கப்பட்டுள்ளன.
தமக்கு
கிடைக்கப்பெற்றுள்ள இந்த ஆதாரங்களின் மூலம் விமானம் விபத்துக்குள்ளான
நேரம் மற்றும் விமானம் பறந்த தூரத்தை கண்டறிய முடியும் என மலேசிய
நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
விமானிகளுக்கான பிரத்தியேக அறையில்
பெறப்பட்ட குரல் பதிவு மூலம் விமானம் எவ்வாறு தாக்குதலுக்குள்ளானது என்பதை
இலகுவாக கண்டறிய முடியும் எனவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இரண்டு கறுப்புப் பெட்டிகளும் சேதமடையவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில்
ரஷ்யாவினால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் மூலமாகவே ரஷ்ய ஆதரவு படையினரால் இந்த
தாக்குதல் மேற்கொண்டமைக்கான சான்றுகள் வலுப்பெறுவதாக மேற்குலக நாடுகள்
தெரிவிக்கின்றன.
கடந்த
வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் அதில் பயணித்த 298 பேரும்
உயிரிழந்ததுடன் இதுவரை 196 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments