இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்ற
இந்திய அணிக்கு பிரதமர் மோடி தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
லோர்ட்ஸ் மைதானத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த இந்திய அணி குறித்து பெருமிதம் கொள்வதாக மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை,
லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கிலாந்து அணியை
வீழ்த்தியமை, இந்திய அணிக்கு முக்கிய திருப்பம் என முன்னாள் வீரர் சுனில்
கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
லோர்ட்ஸ் மைதானத்தில், இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 95 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
இதன்மூலம் ஐந்து போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒன்றுக்கு பூச்சியம் என்ற கணக்கில் இந்தியா முன்னணி பெற்றுள்ளது.
28
ஆண்டுகளுக்கு பிறகு லோர்ட்ஸ் மைதானத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளதுடன்,
இங்கிலாந்து அணி 10ஆவது போட்டியில் தொடர் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த
போட்டியின் மூலம் மூன்று வருடங்களுக்கு பின்னர் முதல் முறையாக
வெளிநாடொன்றில் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றுள்ளமையும்
குறிப்பிடத்தக்கது.
28 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா, இங்கிலாந்தை
வீழ்த்தியமை மறக்க முடியாத வெற்றியாகும் என இந்திய அணித் தலைவர் மஹேந்திர
சிங் தோனி கூறியுள்ளார்.
எனினும் தோல்வியை அடுத்து, இங்கிலாந்து அணியின் தலைவர் அலிஸ்ட்டர் குக் மீதான அழுத்தங்கள் தொடர்ந்தும் அதிகரித்துள்ளன.
எவ்வாறாயினும் இந்த தோல்வியினால் தாம் அணித் தலைவர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை என குக் தெரிவித்துள்ளார்.
Narendra Modi @narendramodi
Well played Team India! Congrats on the wonderful victory at Lord’s. We are very delighted & proud of the great performance.
Well played Team India! Congrats on the wonderful victory at Lord’s. We are very delighted & proud of the great performance.


0 Comments