Subscribe Us

header ads

பெரும்பாலான கடலோரப்பகுதிகளில் சிறிதளவிலான மழை பெய்யலாம்!

நாட்டின் பெரும்பாலான கடலோரப்பகுதிகளில் இன்று (22) சிறிதளவிலான மழையுடன் மிதமான காலநிலை நிலவலாம் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

தென்மேற்கு கரையோரமாக மணிக்கு 20-40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் எனவும் இக்காற்றின் வேகம் மணிக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம் என வானிலை அவதான நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.

காலியிலிருந்து பொத்துவில் ஊடாக மாத்தறையிலிருந்து கொழும்பு, முல்லைத்தீவு, மன்னார், சிலாபம்,திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை ஆகிய பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ அளவில்  காற்று வீசலாம் என எதிர்பார்க்கப்படுவதுடன் மழை பெய்வதற்கான சாத்தியங்களும் காணப்படுவதாக வானிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானமாக செயற்படுமாறு வேண்டப்படுகின்றனர்.

Post a Comment

0 Comments