MH17 விமானத்தினை சுட்டு வீழ்த்தியவர்களுக்கு அவர் இந்த நெருடல் மிக்க கடித்தினை வரைந்துள்ளார்.
மிகவும் துணிச்சலுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது விரல் நீட்டி அவர் எழுதியுள்ள இந்த கடித்தில் “எனது மகளை கொன்ற உங்களுக்கு எனது நன்றிகள்” என்று விரக்தியில் தனது விசனத்தினை முன்வைத்துள்ளார்.
”MH17 விமானத்தினை சுட்டுவீழ்த்தியதற்கு பொறுப்பானவர்கள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினோ பிரிவினை குழுவின் தலைவர்களோ அல்லது யுக்ரேய்ன் அரசாங்கமோ என யாராக இருந்தாலும் எனது மகளை கொன்றதற்கு நன்றிகள்” என அவர் எழுதிய கடிதம் நெதர்லாந்து பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது.
எதிர்பாராதவிதமாக அவள் விமானத்தில் பயணித்தாள், யுத்தம் நடைபெறும் நாட்டின் வான்பரப்பில் அவள் சுட்டு வீழ்த்தப்பட்டாள்” என்று 297 உயிர்களுடன் தனது மகளையும் இழந்து தவிக்கும் நெதர்லாந்து தந்தை குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய அரசாங்கத்தினால் வினியோகிக்கப்பட்ட எவுகணையினை பயன்படுத்தி ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுவரும் நிலையில் யுக்ரேய்ன் அரசாங்கமே இந்த தாக்குதலுக்கு பொறுப்புக்கூறவேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
”எனது அன்பு மகள் அடுத்த ஆண்டு தனது கல்லூரி படிப்பை தனது தோழிகளான ஜூலியா மற்றும் மரீன் ஆகியோருடன் நிறைவு செய்து (தோழிகள் விமானத்தில் பயணிக்கவில்லை) பொறியியலாளராக வேண்டும் என்ற கனவுடன் இருந்தாள்” என மகளை இழந்த தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
”எனது மகளின் எதிர்காலத்தினை கொன்றதற்காக நீங்கள் பெருமைப்படுவீர்கள் என நான் நினைக்கின்றேன். உங்கள் விம்பத்தினை ஒருதடவை கண்ணாடியில் பாருங்கள். எனவே மீண்டும் உங்களுக்கு நன்றிகள்” என அவர் தனது கடிதத்தினை முடித்துள்ளார்.


0 Comments