இலங்கை, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டித்தொடர் இன்று (16) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியது.
இரண்டு போட்டித்தொடர்கள் அடங்கிய தொடரின் முதற்ப் போட்டி இதுவாகும். இலங்கை அணி சார்பாக இன்று உபுல் தரங்க களமிறங்கவுள்ளார். இதேவேளை விக்கெட் காப்பாளர் பிரசன்ன ஜயவர்தன உபாதை காரணமாக விளையாடாத நிலையில் தினேஷ் சந்திமால் விக்கெட் காப்பாளராக களமிறங்கவுள்ளார்.
தென்னாபிரிக்கா டெஸ்ட் அணியின் தலைவராக ஹாசிம் அம்லா நியமிக்கப்பட்டு தலைமை தாங்கும் முதற்ப் போட்டியாக இந்தப் போட்டி அமையவுள்ளது.
இரு அணிகளுக்குமிடையில் இதுவரை 20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 10 போட்டிகளில் தென்னாபிரிக்கா அணியும் 5 போட்டிகளில் இலங்கை அணியும் வென்றுள்ளன. 5 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன.
இலங்கையில் இதுவரை இரு அணிகளுக்குமிடையில் 10 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 4 போட்டிகளில் இலங்கை அணியும், தென்னாபிரிக்கா அணி 2 போட்டிகளிலும் வென்றுள்ளன. 4 போட்டிகள்சமநிலையில் நிறைவடைந்துள்ளன.
மஹேல ஜயவர்த்தன ஓய்வு பெறுவதாக அறிவித்த பின் நடைபெறும் இப் போட்டியில் இலங்கை அணியினர் வெற்றி பெறுவதன் மூலம் அவருக்கு பெருமையினை தேடிக் கொடுக்கமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


0 Comments