எதிர்வரும் ஊவா மாகாணசபைத் தேர்தலில் முதன்மை வேட்பாளராக போட்டியிட
அனுமதி கோரியிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தனது
வெற்றிடத்திற்கு சிங்கள பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டுமென
தெரிவித்துள்ளார்.
ஹரின் பெர்னாண்டோ பதவி விலகுவதன் மூலம் பதுளை மாவட்டத்தில் பாராளுமன்ற
உறுப்பினர் ஒருவருக்கு வெற்றிடம் ஏற்படுகின்றது. விருப்பு வாக்குகள்
அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த நிலையில் வேலாயுதம்
இருக்கின்றார். ஹரின் பெர்னாண்டோ பதவியை ராஜினமா செய்தால் அந்த
வெற்றிடத்திற்கு வேலாயுதமே நியமிக்கப்பட வேண்டும். என்றாலும் தனது
வெற்றிடத்திற்கு சிங்கள பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டுமென ஹரின்
பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி இறுதித் தீர்மானம் எதனையும் இதுவரையில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments