Subscribe Us

header ads

நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் ஹக்கீமை காதினால் பிடித்து வெளியே போட்டிருப்பேன் ! ஞானசார தேரர்

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியை நினைத்து நான் வெட்கப்படுகின்றேன். தன்னை இந்த உயர் பதவிக்கு உயர்த்திய பிக்குகள், பௌத்த மக்களை  சர்வதேச ரீதியில் நிந்தனைக்கு உள்ளாக்கும் போது இன்னும் ஏன் அவர் விரல் எண்ணி எண்ணி இருக்கிறார். நான் மட்டும் இந்நாட்டின் ஜனாதிபதியாக  இருந்தால் ஹக்கீமின் காதினால் பிடித்து வெளியில் போட்டிருப்பேன் என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேதர் இன்று தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இன்று கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இவ்வாறு கூறினார்.
ஹக்கீம் அவர்கள் சர்வதேச ரீதியில் பௌத்தர்களை நிர்வாணப்படுத்தும் போது ஜனாதிபதி மஹிந்த அவர்களும்  சரி, அரசாங்கத்தில் உள்ள ஏனையோரும் சரி தங்களது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக பார்த்துக் கொண்டிருப்பார்களானால், இது இந்த நாட்டு பௌத்தர்களுக்குச் செய்யும் எவ்வளவு பெரிய ஒரு பாவம். இதனை இந்த இயற்கை கூட மன்னிக்க மாட்டாது.
இந்த சிங்கள பௌத்தர்களுக்கு செய்யும் அநியாயத்துக்கு எதிராக நாம் வீடு வீடாகச் சென்று அறிவுறுத்தப் போகிறோம். இந்த நாட்டிலுள்ள 74 வீதமான சிங்கள பௌத்தர்களுக்கு எதிராக முன்னெடுக்கும் வரலாற்று ரீதியிலான தவறைப் பற்றி கவனத்தில் எடுக்காத அரசியல்வாதிகளுக்கு எதிராக செயற்படப் போகிறோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Daily Ceylon 

Post a Comment

0 Comments