TPT Media
புத்தளம் பெரியபள்ளிவாசலும் அ.இ.ஜ.உ. சபை புத்தளம் கிளையும் இணைந்து, காஸாவில் அநியாயம் இழைக்கப்படும் மக்களுக்காக புத்தளம் முஸ்லிம்களின் உள ரீதியான ஆதரவைத் தெரிவிப்பதற்காகவும் இஸ்ரவேலின் மனித படுகொலைகளைக் கண்டிப்பதற்காகவும் எதிர்வரும் ஈதுல் ஃபித்ர் (நோன்புப் பெருநாள்) மைதான தொழுகை கொத்பாவைத் தொடர்ந்து விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
இது தொடர்பாக பெரியபள்ளி நிருவாகத் தலைவர் எஸ்.ஆர்.எம். முஸம்மில், புத்தளம் உலமா சபைத் தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற பூர்வாங்க கலந்துரையாடலின் போது புத்தளம் மக்கள் சார்பாக 'காஸா பிரகடணம்' வெளியிடல், பதாதைகளைக் காட்சிப்படுத்தல், தலைப்பட்டி கட்டுதல், டீ-ஷர்ட் அணிதல் உட்பட சாத்வீக எதிர்ப்புத் தெரிவித்தல்களை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
இதனை சிறப்பாக மேற்கொள்வதற்கான கலந்துரையாடலொன்று, வியாழக்கிழமை 24.07.2014 ழுஹர் தொழுகையைத் தொடர்ந்து பெரியபள்ளியில் நடைபெறும். ஆர்வமுள்ள பொது மக்களும் வாலிபர் அணிகளும் இக் கலந்துரையாடல் அமர்வுக்கு வருகைத் தருமாறு திறந்த அழைப்பு விடுக்கின்றார்கள்.
மேலும், பெருநாள் மைதான தொழுகைக்கு வருகைத் தருவோர் இந் நிகழ்வுகளில் முழுமையான பங்களிப்பை வழங்குமாறு புத்தளம் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
நன்றி: TPT


0 Comments