Subscribe Us

header ads

(படங்கள் இணைப்பு) திடீரென கழன்று விழுந்த பெற்றோல் நிரப்பும் நிலையத்தின் கூரை . லக்கீ எஸ்கேப். இது இங்கிலாந்தில்.

பிரித்தானியாவில் லெஸ்டஷியாரில் உள்ள BP பெற்றோல் நிரப்பும் நிலையத்தின் கூரை அப்படியே கழன்று காரின் மேல் விழுந்துள்ளது.
நல்லவேளையாக அத்தருணத்தில் நிறைய கார்களோ இல்லை வாடிக்கையாளர்களோ அங்கே நின்றிருக்க வில்லை.
ஆனால் 2 கார்கள் அங்கே பெற்றோல் அடிக்கச் சென்றுள்ளது. அவ்விருவரும் பெற்றோலை அடித்துவிட்டு உள்ளே சென்று, காசைக் கட்ட தயாராகிக்கொண்டு இருந்துள்ளார்கள்.
அந்தவேளை வெளியே பாரிய சத்தம் கேட்டுள்ளது. என்ன என்று திரும்பி பார்த்தால் அதிர்ந்து போனார்கள் அவர்கள். கூரை அப்படியே விழுந்துவிட்டது.
யாராவது அந்த வேளை அங்கோ நின்றிருந்தால் அதோகதி தான் . இரும்பு மற்றும் தகரங்களினால் ஆன இந்த பாரிய கூரை நிலத்தில் வீழ்வது ஒன்றும் சாதாரன விடையம் அல்ல.
மனிதர்கள் யாராவது அங்கே நின்றிருந்தால் அவர்களை அது உடனடியாக கொன்று இருக்கும். ஆனால் அதிஷ்டவசமாக அங்கே எவரும் இல்லை. அங்கே இருந்த 2 கார்களும் நசுக்கிப்போய் விட்டது. புகைப்படங்கள் இணைப்பு !
Thanks to: Madawala News

Post a Comment

0 Comments