Subscribe Us

header ads

பொதுநலவாய போட்டிகளுக்கான சீருடைகள் (படங்கள் இணைப்பு)

இவ்வருட பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்குபற்றும் நாடுகளின் போட்டியாளர்கள் ஆரம்ப வைபவத்தின்போது அணிவதற்கான சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. 

இவற்றில் ஸ்கொட்லாந்து அணிக்கான சீருடை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஸ்கொட்லாந்து ஆண் போட்டியாளர்களுக்கும் பாவாடை போன்ற ஆடை சீருடையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்து ஆண்களின் பாரம்பரிய ஆடையையொத்ததாக இந்த சீருடை உள்ளது. ஆனால், பலர் இந்த வடிவமைப்பை குறை கூறுகின்றனர்.

சர்வதேச புகழ்பெற்ற ஸ்கொட்லாந்து ஆடை வடிவமைப்பாளரான ஜிலி பிளெக்வூட் இந்த சீருடையை வடிவமைத்துள்ளார். மேற்படி சீருடை பொருத்தமானது எனவும் தனது ஆடை வடிவமைப்பு குறித்து தான் பெருமை கொள்வதாகவும் ஜிலி பிளெக்வூட் தெரிவித்துள்ளார்.


'இந்த ஆடையை தாம் விரும்பவில்லை என சிலர் இணையத்தளங்களில் தெரிவித்துள்ளனர்;. ஒருபோதும் அனைவரையும் திருப்திபடுத்த முடியாது. எனது வடிவமைப்பு குறித்து நான் பெருமையடைகிறேன்' என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய விளையாட்டு விழா ஜூலை 23 ஆம் திகதி முதல் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  







✔ Like US: https://www.facebook.com/kalpitiyavoice

Post a Comment

0 Comments