Subscribe Us

header ads

எனது நண்பன் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா சம்பியனாக வேண்டும்: நெய்மர் வாழ்த்து

உலக கிண்ண கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் ஜேர்மனியை லயனல் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீன அணி தோற்கடித்து சம்பியனாக வேண்டும் என பிரேஸில் நட்சத்திர வீரர் நெய்மர் கூறியுள்ளார். 

கொலம்பியாவுடனான கால் இறுதிப்போட்டியில் காயமடைந்து அரையிறுதிப் போட்டியில் நெய்மர் விளையாடாத நிலையில் பிரேஸிலை ஜேர்மனி 7:1 விகிதத்தில் வென்றமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தனது பார்ஸிலோனா அணி சகாவும் நண்பருமான லயனல் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீன அணி உலக கிண்ணத்தை வெல்ல வேண்டுமென நெய்மர் கூறியுள்ளார். 

"இவ்விளையாட்டில் மெஸ்ஸியின் வரலாறு முக்கியமானது. அவர் ஏராளமான கிண்ணங்களை வென்றுள்ளார். அவர் எனது நண்பர். எனது அணி சகா. அவரை நான் வாழ்த்துகிறேன்" என செய்தியாளர் மாநாடொன்றில் நெய்மர் கூறியுள்ளார். 

டெரிஸோபொலிஸ் நகரில் வியாழனன்று நடைபெற்ற இச்செய்தியாளர் மாநாட்டில் உணர்ச்சிவசப்பட்டவராக நெய்மர் காணப்பட்டார்.   

காயமடைந்தபோதிலும் இறைவனின் ஆசி காரணமாக தான் சக்கர நாற்காலி மூலம் நடமாடும் நிலைக்குதள்ளப்படவில்லை எனவும் நெய்மர் கூறினார். 

பிரேஸில் அணி இறுதிப்போட்டியில் விளையாடாவிட்டாலும் 3 ஆவது இடத்துக்கான போட்டியில் நெதர்லாந்தை வென்று தனது தனது கௌரவத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் நெய்மர் கூறினார்.

 



Post a Comment

0 Comments