இனவாதத்தினை தூண்டி அதன் மூலம் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவே
அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஊவா மாகாண சபைத் தேர்தலிலும் இது
விதிவிலக்கல்ல என தெரிவிக்கும் ஜே.வி.பி. இம்முறை ஊவா மாகாண சபைத்
தேர்தலிலும் மக்கள் அரசாங்கத்திற்கு தக்க பாடத்தினை கற்பிப்பார்கள்
எனவும் குறிப்பிட்டது.ஜே.வி.பி. யினால் நேற்று ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அக்கட்சியின்
ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
✔ Like US: https://www.facebook.com/kalpitiyavoice
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
ஏனைய மாகாண சபைத்தேர்தலை விடவும் ஊவா மாகாண சபைத்தேர்தல்
அரசாங்கத்திற்கு மிக முக்கியமானது. தமது ஆட்சி தொடர்பில் அடுத்த
கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் இத்தேர்தலினை சரியாக
பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த முறை ஊவா மாகாண சபைத்தேர்தல் 2009
ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இடம்பெற்றது. அதன்பின்னர் அரசாங்கம்
உடனடியாக ஜனாதிபதித் தேர்தலை நடத்தியது. இம்முறையும் அவ்வாறான
நிலைமையே ஏற்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் ஒன்றினை
நடத்த வேண்டிய நிலையில் ஊவா மாகாண சபைத் தேர்தலின் முடிவில் அரசாங்கம்
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் உறுதியான முடிவினை எடுக்கும்.
எனவே, அரசாங்கம் ஊவா மாகாண சபைத் தேர்தலை குறிவைத்து தமது
தந்திரங்களை பிரயோகிக்கும். இன்று அரசாங்கம் தேர்தலில்
வெற்றிபெறவோ தமது ஆட்சியினை தக்க வைத்துக்கொள்ளவோ இனவாதத்தினை
ஆயுதமாக பயன்படுத்திக்கொண்டிருக்கின்றது. இது ஊவா மாகாண சபைத்
தேர்தலிலும் விதிவிலக்கானதல்ல. எனினும் மக்கள் தெளிவான முடிவினை
எடுப்பார்கள். இன்று நாம் பயணிக்கும் பாதை மிக மோசமானது. மக்களின்
எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என்பதை மக்கள் நன்கு உணர்ந்து
விட்டனர். எனவே அரசாங்கத்தின் அடாவடித்தனமான ஆட்சிக்கும்
அடக்குமுறைகளுக்கும் தக்க பதிலடியினை இம்முறை ஊவா மாகாண
தேர்தலில் மக்கள் வெளிப்படுத்துவார்கள். கடந்த இரு மாகாண சபைத்
தேர்தலிலும் மக்கள் அரசாங்கத்திற்கு சிவப்பு விளக்கு சமிக்ஞையினை
காட்டி எச்சரித்துள்ளனர். அதேநிலைமை அல்லது அதை விட மோசமான
நிலைமையினை இம்முறை ஊவா மாகாண தேர்தலில் மக்கள்
வெளிப்படுத்துவார்கள் எனவும் தெரிவித்தார்.
ராமலிங்கம் சந்திரசேகர்
இவ் செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த ஜே.வி.பி. யின்
முன்னாள் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் ராமலிங்கம்
சந்திரசேகர் குறிப்பிடுகையில்;
ஊவா மாகாணமே இலங்கையில் மிகவும் வறுமைக்குள்ளான மாகாணமாகும். வடக்கு
கிழக்கு அடுத்த நிலையில் இருக்கின்றது. ஆனால் வடக்கில் கடந்த
காலங்களில் யுத்தம் இடம்பெற்றது. ஆனால் ஊவா மாகாணம் அவ்வாறான
பாதிப்பினை எதிர்நோக்கவுமில்லை. அவ்வாறான நிலையில் அரசாங்கம்
தட்டிக்கழித்த மாகாணமாகவே இது மாறியுள்ளது.
அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் தமது
குடும்ப அரசியலில் ஆதிக்கத்தை செலுத்திக்கொண்டிருக்கின்றனர். எனவே
இன்று ஊவா மாகாண சபையில் தேர்தலை முன்னிட்டு இவர்கள் மக்களுக்கு
பொருட்களையும் பணத்தையும் கொடுத்து தமது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள
நினைக்கின்றனர்.
கல்வி மட்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலை காணப்படுகின்றது. தமிழ்
மொழியில் சித்தியடைந்த வீதம் 25 வீதமாகவே உள்ளது. அவ்வாறான
நிலையில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள்
மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது. எனவே இதில் மாற்றம் ஒன்றினை
ஏற்படுத்த மக்கள் விடுதலை முன்னணி முயற்சித்துள்ளது. தோட்டத்தொழிலாளர்கள்
மற்றவர்களை வாழவைக்க போராடி கொண்டிருக்கின்றனர். இப்போது உங்ளுக்காக
உங்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக போராட வேண்டும். அதற்கு எம்முடன்
கைக்கோர்த்திருங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
✔ Like US: https://www.facebook.com/kalpitiyavoice
✔ Follow Us: https://twitter.com/kalpitiyavoice
✔ Follow Us in Groups: https://www.facebook.com/groups/kalpitiyavoice


0 Comments