இஸ்ரேலானது காஸாவின் பாதுகாப்பு தலைமையகங்கள் மற்றும் பொலிஸ்
நிலையங்களை இலக்குவைத்து சனிக்கிழமை இரவு கடும் வான் தாக்குதல்களை
நடத்தியுள்ளது.
கடந்த 8 ஆம் திகதி காஸாவுக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல்
ஆரம்பித்ததையடுத்து இடம்பெற்ற உக்கிர குண்டு வீச்சுத் தாக்குதல்
சம்பவமாக இது உள்ளது.
இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை காஸா பிராந்தியத்தில் நடத்திய இருவேறு
தாக்குதல்களில் 14 வயது சிறுவன் ஒருவனும் பெண்ணொருவரும்
பலியாகியுள்ளனர்.
காஸாவின் வட நகரான ஜபாலியா மற்றும் மத்திய காஸாவிலுள்ள மகாஸி அகதிகள்
முகாம் என்பவற்றின் மீது இந்தத் தாக்குதல்கள்
நடத்தப்பட்டுள்ளன.காஸா பிராந்தியத்திலுள்ள பலஸ்தீன போராளிகள்
சனிக்கிழமை சுமார் 90 ஏவுகணைகளை தமது பிராந்தியத்தின் மீது
ஏவியதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.
காஸாவிலான வான் தாக்குதலில் குறைந்தது 159 பலஸ்தீனர்கள்
பலியாகியுள்ளனர். அவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர்
உள்ளடங்குகின்றனர்.இந்நிலையில் இஸ்ரேலானது தாம் ஹமாஸ்
போராளிகளின் சிரேஷ்ட செயற்பாட்டாளர்களின் வீடுகள் உட்பட
போராளிகளின் தளங்களை இலக்கு வைத்தே தாக்குதல்களை நடத்தியதாக
குறிப்பிட்டுள்ளது.
காஸா பிராந்தியத்தில் கொல்லப்பட்டவர்களில் 77 சதவீதமானவர்கள்
பொதுமக்கள் என ஐக்கிய நாடுகள் சபை மதிப்பீடுசெய்துள்ளது.
இந்நிலையில், ஈராக்கில் யுத்த நிறுத்தமொன்றையும் சமாதானப்
பேச்சுவார்த்தையும் முன்னெடுக்க அந்த சபை அழைப்பு விடுத்துள்ளது.
காஸா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் ஆரம்பித்தமைக்குப் பின்னர் ஐக்கிய
நாடுகள் பாதுகாப்பு சபை அது தொடர்பில் அறிக்கையை வெளியிடுவது இதுவே
முதல் தடவையாகும்.
ஹமாஸ் போராளிகளின் பாதுகாப்புத் தலைமையகங்கள், பொலிஸ் நிலையங்கள்
என்பவற்றில் சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் அவர்களின்
பாதுகாப்பு வளாகமொன்று கடும் சேதத்துக்குள்ளாகியுள்ளது.
காஸா பிராந்தியத்திலுள்ள சுமார் 1,320 தீவிரவாத தளங்களை இலக்கு
வைத்துதாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர்
தெரிவித்தனர்.அதேசமயம் ஹமாஸ் போராளிக் குழுவானது இஸ்ரேல் மீது 800
க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியுள்ளது.
✔ Follow Us: https://twitter.com/kalpitiyavoice
✔ Follow Us in Groups: https://www.facebook.com/groups/kalpitiyavoice


0 Comments