Subscribe Us

header ads

எமது பிரதேச தேங்காய் வியாபாரிகளுக்கு ஓர் நற்செய்தி! தேங்காய் மட்டை, தண்ணீர் என்பவற்றினூடாக வருமானம்

ஒதுக்கப்பட்டும் தேங்காய் மட்டை மற்றும் தேங்காய் தண்ணீர் என்பவற்றை வருமானம் தரும் பொருட்களாக மாற்ற முடியும் என்று தெங்கு அபிவிருத்திச் அதிகாரச்சபையின் பணிப்பாளர் அருண குணதிலங்க அரசாங்கத் தகவல் திணைக்களத்திற்கு தெரிவித்தார்.

இலங்கையில் சேகரிக்கப்படும் தேங்காய் மட்டைகளில் 45 வீதம் மட்டுமே தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுகின்றன. 90 வீதமானவை பயனற்றவகையில் வீணாக்கப்படுகின்றன. எனினும் 80 வீதமானவை தெங்கு முக்கோணப்பிரதேசங்களுக்கு அண்மையிலுள்ள தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுகின்றன.

ஒதுக்கப்பட்டும் தேங்காய் மட்டைகளை பயனுள்ள வகையில் மாற்றுவதற்கான பாரிய திட்டமொன்றை தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை முன்னெடுக்கிறது. தேங்காய் மட்டையுடன் தொடர்புபட்ட பல்வேறு கைதொழில்களினூடாக மக்களின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான சலுகையடிப்படையில் உபகரணங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதேபோன்று கொப்பரா தேங்காய் மற்றும் தேங்காய் தண்ணீர் என்பன அதிகளவில் வீணாகின்றன. அவற்றினூடாகவும் பணம் சம்பாதிக்க முடியும். தேங்காய் தண்ணீரை ஏற்றுமதி செய்வதற்கான தனியார் கைதொழில் சில அடையாளங்காணப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில் அதிக தேங்காய் தண்ணீரை ஏற்றுமதிச் செய்ய நாம் எதிர்பார்த்துள்ளோம்.

சர்வதேச வியாபரச் சந்தையில் ஒரு லீட்டர் தேங்காய் தண்ணீர் 2.50 அமெரிக்க டொலருக்கு விலை போகிறது என தெங்கு அபிவிருத்தி அதிகாரச்சபை பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments