-Dr. மஸிஹுதீன் இனாமுல்லாஹ்-
2005 இல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது அரசு அமையும் பொழுதே
கடும்போக்குவாத சகதிகளின் துணையுடன் தான் அமைந்தது, அன்று பிரிவினைவாத
பயங்கரவாத பாசிச புலிகளுக்கெதிரான போராட்டத்தை நடத்துவதற்காக ஜே வீ பீ
கொடுத்த ஆதரவு மஹிந்த ஆட்சியை தூக்கி நிறுத்தியது, பின்னர் ஜே வீபி ஐ
மஹிந்த உடைத்து விமல் வீரசிங்க தலைமையில் தேசிய சுதந்திர முன்னணி எனும்
புதிய கட்சியை கூட்டு சேர்த்துக் கொண்டார்,
ஐக்கிய தேசியக் கட்சில் இருந்து பலரையும் விலைக்கு வாங்கிக் கொண்டதோடு
ஆரம்பத்தில் அமைச்சர் ரிஷாத் மற்றும் அதாவுல்லாஹ் பேரியல் அஷ்ரப் ஆகியோரது
கட்சிகளை தன்னுடன் வைத்துக் கொண்டிருந்த மஹிந்த பின்னர் ரவூப் ஹகீமையும்
தன்னுடன் இணைத்துக் கொண்டார்.
2010 இல் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைவதற்கான நெருக்கடிகள்
உள்வீட்டில் ஏற்படுத்தப் பட்டன அரசியலமைப்பில் மஹிந்த ராஜபக்ஷவின்
சர்வாதிகாரத்தை மென்மேலும் உறுதிப்படுத்துகின்ற அரசியலமைப்பு மீதான 18 ஆவது
சீர்திருத்தத்திற்கு ஆதரவளித்ததன் மூலமே முஸ்லிம் காங்கிரஸ்
உள்வாங்கப்பட்டது.தற்பொழுது “நாங்களாக வெளியேற்ற முன் நீங்களாகவே வெளியே
சென்றுவிடுங்கள் ” என முஸ்லிம் காங்கிரசுக்கு அரசுக்கு கூறுகிறது.
கடந்த தேர்தல்களை யுத்தம் யுத்த வெற்றி ஆகிய சுலோகங்களுடன் வெற்றி கொண்ட
மஹிந்த அரசு இப்பொழுது வெகு வேகமாக சரிந்து வரும் செல்வாக்கை சரி செய்து
கொள்ள இன மத வெறி அரசியலை கையில் எடுத்துள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்
காட்டுகிறார்கள், தமிழ் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்த தேசத்தின்
புத்திரன் இஸ்லாமிய அடிப்படை வாதம் ,இஸ்லாமிய தீவிரவாதம் ,இஸ்லாமிய பயங்கர
வாதம் என்பவற்றிலிருந்து தேசத்தை பாது காக்கப் போவதாக புதிய ஒரு எதிரியை
சிங்கள பௌத்த மக்களுக்கு காட்ட எத்தனிப்பதாக ஜே வீ பீ மற்று ஐக்கிய தேசியக்
கட்சி ஆகியன பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகின்றன.
கடும்போக்குவாத ஹெல உறுமய, ராவண பலய, பொது பலய என பல சேனாக்களை அரசே போசித்து வருவதாக பல்வேறு தரப்புக்களும் குற்றம் சாட்டி வருகின்றன.
கடும்போக்குவாத ஹெல உறுமய, ராவண பலய, பொது பலய என பல சேனாக்களை அரசே போசித்து வருவதாக பல்வேறு தரப்புக்களும் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் முற்போக்கு தேசிய சக்திகளுடன் இணைந்து அரசியல் உள்
நோக்கங்களைக் கொண்ட முஸ்லிம் களுக்கு எதிரான காழ்ப்புணர்வு வன்முறை
பிரச்சாரங்களுக்கு முகம் கொடுப்பதா..? அல்லது முஸ்லிம்களா தங்களது
விகிதாசார எல்லைகளுக்குள் அதிலும் பல கூறுகளாக பிளவுபட்ட பலவீனமான கள
நிலவரங்களுக்குள் இனரீதியிலான அரசியலை சந்தைப்படுத்துவதா ? என்பதில்
மிகவும் தெளிவாக இருத்தல் வேண்டும்…
முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்கள் பாரிய அரசியல் இராஜ தந்திர
பின்புலன்களை கொண்டுள்ள தேசிய பிரச்சினையாகும் அவை இந்த நாட்டின் அமைதி
சமாதானம் ஒருமைப்பாடு பொருளாதார சுபீட்சம் என சகல அமச்ங்களுடனும்
தொடர்புபட்டவை எனவே மிகவும் சாணக்கியமான சமயோசிதமான தேசிய அரசியல்
நகர்வுகளை தேசத்தில் உள்ள ஏனைய முற்போக்கு மிதவாத சக்திகளுடன் இணைந்தே நாம்
தென்னிலங்கையில் மேற்கொள்ள வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும்…
இன்று முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள அத்துணை சவால்களுக்குப்
பின்னாலும் அரசியல் இராஜதந்திர நகர்வுகள் இருக்கின்றன, எமது கடந்தகால
அரசியலின் அறுவடைகளையே நாம் இன்று செய்து கொண்டிருக்கின்றோம் .
நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்…?
நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்…?


0 Comments