இலங்கை
கடற்படையின் 19 ஆவது தளபதியாக ரியர் எட்மிரல் ஜயந்த பெரேரா இன்று காலை
சுபவேளையான 9.30 மணிக்கு கொழும்பு கடற்படைத் தலைமையகத்தில் பதவியேற்றார்.
முப்படைகளின் சேனாதிபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
63 வயதான இவர் ஹங்வெல்லையைப்
பிறப்பிடமாகக் கொண்டவர். கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் கல்வி பயின்ற இவர்
1978 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தி்கதி கடற்படையில் இணைந்தார்.
இந்தியாவின் கொச்சி நகரில் உள்ள இராணுவக் கல்லூரியில் ஆயுதப் பயிற்சி பெற்றார்.
மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்புக் கல்லூரிகளில் பட்டம் பெற்றுள்ளார்.
அத்துடன் கடற்படையின் சகல பிரிவுகளிலும் 38 வருட காலம் சேவை புரிந்து சிறந்த அனுவம் பெற்றவருமாவார்.



0 Comments