Subscribe Us

header ads

இஸ்லாமிய நாட்டின் தலைவராக அபு பக்கீர் அல்-பக்தாதியை அறிவித்த கிளர்ச்சியாளர்கள்

ஈராக், சிரியா நாடுகளில் கைப்பற்றிய பகுதிகளுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் இஸ்லாமிய நாடு என பெயரிட்டுள்ளதோடு, நாட்டின் தலைவராக அபு பக்கீர் அல்-பக்தாதி (Abu Bakr al-Baghdadi) என்பவரையும் அறிவித்துள்ளனர்.

ஈராக்கில் ஷியா ஆதரவு அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்நாட்டின் மொசூல், திக்ரித், கர்பாலா உள்ளிட்ட பல்வேறு நகரங்களை கைப்பற்றிய அவர்கள் தலைநகர் பாக்தாத்தை நோக்கி முன்னேறியுள்ளனர்.

இந்நிலையில், கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள திக்ரித் நகரை கைப்பற்றுவதற்கான தரை மற்றும் வான் வழித் தாக்குதல்களை படையினர் முன்னெடுத்துள்ளனர்.

திக்ரித்தில் அமைந்துள்ள ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைனின் மாளிகை மீதும் படையினர் வான் வழித்தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதேவேளை கிளரச்சியாளர்கள் ஈராக்கின் இராணுவத் தளமொன்றை கைப்பற்றியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

திக்ரித் நகரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் முகாமிட்டிருந்த தீவிரவாதிகளை முற்றுகையிட்டு இராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியதில் கிளர்ச்சியாளர்கள் 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சிரியாவின் அலெப்போ பகுதி முதல் ஈராக்கின் தியாலா நகரம் வரை உள்ள பகுதிகள் அனைத்தும் தாங்கள் அமைத்துள்ள இஸ்லாமிய நாட்டில் உள்ளடங்கும் என கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments