Subscribe Us

header ads

ஹஜ் கோட்டாவை பங்குபோடும் பெளஸியும், அப்துல் காதரும்..!

 இலங்கைக்கு இவ் வருடம் கிடைக்கப் பெற்றிருக்கும் ஹஜ் கோட்டாவை தேசிய ஹஜ் குழுவின் இணைத் தலைவர்கள் இருவரும் ஐம்பது வீதம் என்றபடி சிபாரிசு செய்ய வேண்டுமென புத்தசாசன சமய விவகார அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக் குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய ஹஜ் குழுவின் இணைத் தலைவர்களாக சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸியும், சுற்றாடல் மற்றும் புதுப் பிக்கத்தக்க சக்தி பிரதிய மைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதரும்
கடமையாற்றுகின்றனர்.

புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் மாதாந்த ஆலோசனைக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானப்படி இவர்கள் 50 வீதப்படி ஹஜ் கோட்டாவுக்கு சிபாரிசு வழங்குவது அவசியம் என்று பிரதியமைச்சர் அப்துல் காதர் குறிப்பிட் டார்.

இதேபோன்று ‘பேஸா’ விஸாக்களுக்கும் இருவரும் ஐம்பது வீதப்படி சிபாரிசு வழங்க வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். புத்த சாசன மற்றும் சமய விவகார அமைச்சின் மாதாந்த பாராளுமன்ற ஆலோசனை கூட்டம் பிரதமர் டி.எம். ஜயரட்ன தலைமையில் பாராளுமன்ற கட்டடத்தில்  நடை பெற்றது.

இக்கூட்டத்தின் போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

✔ Like US: https://www.facebook.com/kalpitiyavoice

Post a Comment

1 Comments

  1. THIS IS OUR LEADERS ..................................................................... WE ARE IN A MONTH IN WHICH ORDERED TO REFRAIN SCOLDING & FIGHTING EACH OTHER .....HERE OUR LEADERS TRYING & FIGHTING TO GIVE LEADERSHIP FOR HAJ -IT IS NOW THE CUSTOM WHEN EACH YEAR HAJ IS NEARING. BUT WHEN MUSLIM UMMAH NEEDED .................LEADERSHIP.............. NOT IN THE SCENE TO GET A SIGNATURE... LAST TIME SHOURA COUNCIL NEEDED THE SIGNATURES OF MEMBERS OF MUSLIM PARLIAMENTARIANS. SOME OF THEM REFRAIN FROM SIGNING THE DOCUMENT. AT THE END WHAT THEY SAID "THEY SAID THEY DID NOT APPROACH THEM"....THIS IS OUR LEADERS .. ONE WHO WISHES TO GIVE LEADERSHIP SHOULD WORK VOLUNTARILY IN THE FIELD FOR THE SOCEITY......... OUR LEADERS DO NOT KNOW EVEN THIS BASIC QUALITY.......... WHAT A LEADERS.........

    ReplyDelete