Subscribe Us

header ads

''நரகத்தின் கதவுகளை திறந்து விட்டுள்ள கோத்தாபய ராஜபக்ச''

(Gtn)

அரசு சார அமைப்புகளது பணியாளர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளார் கோத்தாபய ராஜபக்ச நரகத்தின் கதவுகளை  திறந்து விட்டுள்ளதாக ஆசிய மனித உரிமை ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு அரச சார அமைப்புகளுக்கு விடுத்துள்ள அறிக்கை குறித்து அது மேலும் தெரிவித்துள்ளதாவது.

அரச சார அமைப்புகள்  பத்திரிகையாளர் மாநாடுகள், ஊடக அறிக்கைகள் மூலமாக தங்களை வெளிப்படுத்த முயனறால், அவர்களுக்கு நரகத்தின் கதவுகளை  திறந்து விட்டுள்ளதாக மாத்திரம் பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கவில்லை, பல இலங்கையர்கள் ஏற்கனவே எதிர்கொண்ட ஆபத்தை இவர்களும் எதிர்நோக்க வேண்ம்டியிருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளது.

யுத்த குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் மனோநிலையையும் இது வெளிப்படுத்துகின்றது, அவர் இந்த நாடு சிந்திக்காத, பேசாத, அரசை விமர்சிப்பதை கனவிலும் கூட காணாத மக்கள் இருக்க வேண்டிய நாடாக கருதுகின்றார் –(மரித்துப் போன மனிதர்கள் உள்ள நாடாக) அரசு எவ்வளவு மோசமான நிலைக்கு கீழிறங்கிவிட்டது என்பதற்கான எச்சரிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments