Subscribe Us

header ads

ஒற்றுமைப்பட்ட புத்தளம் சமூகம்; வாலிபரின் உள்ளங்கள் பேசுகின்றது -

இன்றைய நோன்புப் பெருநாள் தொழுகையை புத்தளம் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக பார்க்கப்பட வேண்டும். இதுவரை காலமும் நான்கு மைதானங்களில் நடைபெற்ற பெருநாள் தொழுகைகள் இன்று பெரியபள்ளியின் தலைமைத்துவத்தில் ஓரிடத்தில் நடைப்பெற்றது,

இன்றைய நோன்புப் பெருநாள் மைதான தொழுகையில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்துகொண்டு காஸா மக்களுக்காக தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

புத்தளம் சமூகம் பிரிவினைகளுக்கு அப்பால் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் அணி திரளுவார்கள் என்பதை இன்றைய நிகழ்வு நிதர்சணமாக உணர்த்தி நிற்கிறது.

இம்முயற்சியை ஆரம்பித்த பெரியபள்ளி, உலமா சபை, நகரபிதா, ஏற்பாட்டாளர்கள் ஆகியோருடன் இது கைகூடுவதற்கு ஒத்துழைத்தவர்கள் பலரும் இங்கு குறிப்பிடத்தக்கவர்கள்.

இன்றைய முயற்சியில் நாம் அடைந்த அடைவுகளை பின்வருமாறு பட்டியலிடலாம்.

01. அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஒரு மேசையில் இருந்து கலந்துரையாடியமை.

02. மைதான தொழுகையை ஏற்பாடு செய்துவரும் குழுக்கள் கலந்துரையாடி, அவர்களின் வழமையான இடங்களை விட்டுக்கொடுத்து சாஹிரா மைதானத்திற்கு வந்தமை.

03. நேற்று பெருநாள் கொண்டாடிய சகோதரர்கள் இன்றைய கொத்பாவில் பங்குகொண்டு தலைமைத்துவ முடிவை ஆதரித்தமை.

04. கொத்பா பிரசங்கத்தை நடாத்தும் உலமாவை தெறிவு செய்யும் உரிமையை உலமா சபைக்கு வழங்கியமையும் அதை உலமா சபை பொறுப்பேற்றமையும்.

05. கொத்பா பிரசங்கத்தின் தலைப்பு "காஸாவின் இன்றைய நிலைமை" என்ற ஒன்றுபட்ட தீர்மானத்திற்கு வந்தமை.

06. குறுகிய காலத்திற்குள் இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்பாட்டத்தை இளைஞர் குழுக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்தமை.

07. மக்கள் அனைவரும் T-Shirt, தலைப்பட்டி, பதாதைகள், ஸ்டிக்கர் அணிந்து மனப்பூர்வமான பங்களிப்பை வழங்கியமை.

இவ்வாறு பல விடயங்களில் புத்தளம் சமூகம் ஒன்றுபட்டிருப்பது மிகவும் சந்தோசமான விடயமாகும்.

இவ் ஆரம்பம் ஒழுங்குபடுத்தப்பட்ட வழிகாட்டலில் நெறிப்படுத்தப்படும்போது 'நம்மை நாம் ஆளும்' கனவு மெய்ப்படுவதோடு, நாம் இழந்து நிற்கின்ற பல விடயங்களை வென்றெடுத்து புதிய புத்தளத்தை உருவாக்க முடியும், இன்ஷாஅல்லாஹ்

வல்ல அல்லாஹ் எமது அடைவுகளை பூரணப்படுத்த அருள்பாலிப்பானாக ஆமீன்

(எம்.எப்.எம். முஷ்ரிப்)
https://www.facebook.com/mushrif.mohamed.9

LikeLike ·  · Share · 12 hrs · Edited

Post a Comment

0 Comments