Subscribe Us

header ads

ஜோசப் யோபோ ‘ஓவ்ன் சைட் கோல்’; சர்ச்சைக்கு மத்தியில் காலிறுதிக்குள் நுழைந்தது பிரான்ஸ்

உலகக் கிண்ண கால்ப்பந்தாட்டப் போட்டிகளின் காலிறுதிச் சுற்றுக்கு பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

‘நொக் அவுட்’ சுற்றுப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் நைஜீரிய அணிகளுக்கிடையலான போட்டி விறுப்பாக விறுப்பாக நடைபெற்றது
இரு அணியினருக்கும் ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் எதனையும் பெற முடியவில்லை

இந்நிலையில் இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் பெறும் கங்கணத்தோடு களமிறங்கின.

போட்டியின் 70ஆவது நிமிடத்தில் பிரான்ஸின் பென்சிமாவின் கோல் பெறும் முயற்சி சந்தேகத்தை தோற்றுவித்தது.

பிரான்ஸ் வீரர் பென்சிமா கோலை நோக்கி அடித்த பந்தை நைஜீரிய வீரர் விக்டர் மோசஸ் கோல் கம்பத்தின் அருகாமையில் தடுத்தார்
இருந்த போதிலும் அது கோலாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டது

இதையடுத்து கோல் லைன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும் இறுதியில் அது கோல் அல்லவென அறிவிக்கப்பட்டது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் 79 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணி போட்டியின் முதலாவது கோலை பதிவு செய்தது
பிரான்ஸ் அணியின் போக்பா இந்த கோலை அணி சார்பாக பெற்றுக் கொடுத்தார்.

இந்நிலையில் கோலொன்றை பெறுவதற்கு நைஜீரிய அணி வீரர்கள் கடுமையாக போராடினர்.

ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் நைஜீரிய வீரர் ஜோசப் யோபோ ஓவ்ன் சைட் கோல் அடித்து தமது ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார்.

இந்த கோலின் மூலம் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டி  இலகுவாக காலிறுதிக்குள் நுழைந்தது.

Post a Comment

0 Comments