Subscribe Us

header ads

தகர்ந்தது அல்ஜீரியாவின் கனவு; ஜேர்மன் காலிறுதிக்கு தகுதி

உலகக் கிண்ண கால்ப்பந்தாட்டத் தொடரின் நொக் அவுட் சுற்றின் மற்றுமொரு எதிர்ப்பார்ப்பு மிக்க போட்டியில் ஜேர்மன் அணி அல்ஜீரிய அணியை வெற்றி கொண்டு காலிறுதிக்குள் நுழைந்தது.

போட்டியின் முழு நேரத்தில் இரு அணிகளும் கோல் எதனையும் பதிவு செய்யாத நிலையில் மேலதிக நேரம் வழங்கப்பட்டது, மேலதிக நேரத்தில் ஜேர்மன் அணி சார்பில் அன்டி ஷெரில் மற்றும் மெசுட் ஓஸில் ஆகியோர் கோல் பெற்றனர்.

அல்ஜீரிய சார்பில் அப்துல் மஹ்மூன் கோல் ஓன்றை பெற்றார்.
இதன் மூலம் ஜேர்மன் அணி 2-1 என்ற ரீதியில் அல்ஜீயரிய அணியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

இதன் மூலம் எதிர்வரும் நான்காம் திகதி இடம்பெறவுள்ள காலிறுதிப் போட்டியில் ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதவுள்ளன.
ஜேர்மன் அணிக்கெதிரன போட்டியில் அல்ஜீரிய அணி தோல்வியடைந்ததை அடுத்து, 2014 கால்ப்பந்தாட்ட போட்டிகளில் இருந்து ஆபிரிக்க அணிகள் அனைத்தும் வெளியேறியுள்ளன.

Post a Comment

0 Comments