இலங்கை மீதான சர்வதேச விசாரணைகளை நடத்தவுள்ள ஐ.நா குழுவுடன்
தொடர்புகொள்ளும் மக்களை அரசாங்கம் தடுக்க முயன்றாலும், விசாரணைகள்
திட்டமிட்டவாறு முன்னெடுக்கப்படும் என நிபுணர் குழுவின் உறுப்பினர் அஸ்மா
ஜெஹங்கிர் (ASMA JAHANGIR) தெரிவித்துள்ளார்.
மக்களை தடுக்க
முயற்சிப்பது இலங்கை அரசாங்கத்திற்கு பாதகமாக அமையக் கூடுமெனவும்
பிபிசிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில்
இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் இரண்டு தரப்பினராலும் இழைக்கப்பட்டதாக
கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தமது விசாரணைக் குழு
பக்கசார்பற்ற, சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்கும் என அஸ்மா ஜெஹங்கிர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் தடுத்தாலும், ஐ.நா பிரதிநிதிகளுடன் தொடர்புகொள்ளும் வழிமுறைகளை மக்கள் கண்டுகொள்வார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்கத்தின்
ஒத்துழைப்பு வழங்காதிருந்த, பல சர்வதேச விசாரணைகளை இதற்கு முன்னரும்
நடத்தியிருப்பதாக நிபுணர் குழுவிலுள்ள அஸ்மா குறிப்பிடுகின்றார்.
இரகசியமாக
தகவல்களை வழங்குவோரின், இரகசியத் தன்மை பாதுகாக்கப்படும் எனவும்,
விசாரணைகளை அடுத்த மாதம் முதலிரண்டு வாரங்களில் ஆரம்பிக்கும் சாத்தியம்
காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமது பரிந்துரைகள் அடங்கிய
விசாரணை அறிக்கையை எதிர்வரும் மார்ச் மாதம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அஸ்மா
ஜெஹங்கிர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


0 Comments