Subscribe Us

header ads

கணிதப் பாடத்தில் சித்தி இல்லாமல் உயர் தரம் கற்க முடியும் – அமைச்சர் பந்துல

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் கணிதப் பாடத்தில் சித்தியடையாது ஏனைய மூன்று பாடங்களில் “C” சி்த்தியைப் பெற்றுள்ள மாணவர்களுக்கு க.பொ.த. உயர் தர வகுப்பில் கல்வியைத் தொடர்வதற்கான அனுமதியை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இம்மாணவர்கள் இரண்டு வருடங்களுக்குள் குறித்த கணிதப் பாடத்தில் சித்தியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனநேற்று  மாதம்பை மெதகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் வைத்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அனுமதிக்கான அமைச்சரவைப் பத்திரம், அடுத்து வரும் நாட்களில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments