Subscribe Us

header ads

வக்பு சபை தலைவரை நீக்கவும்: அஸாத் சாலி

வக்பு சபை தலைவராகவுள்ள அர்கம் உவைஸினை குறித்த பதவியிலிருந்து உடனடியாக நீக்குமாறு மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் எனும் அமைப்பு நேற்று கொழும்பில் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தியது.
அதில் உரையாற்றும் போதே மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி இந்த கோரிக்கையினை முன்வைத்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"எந்தவித தகுதியுமற்றவரே வக்பு சபை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சில தீர்மானங்களை எடுப்பதற்காக மிகவும் கோமாலித்தனமான காரியங்களைப் புரிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முஸ்லிம்களுக்கு தொடர்ந்து அழிவையே ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்த அரசு பள்ளிவாசல் நிர்வாகங்களிலும் இப்போது குழப்பத்தை தூண்டி வருகின்றது. இதை தட்டிக் கேற்க திராணியற்ற நிலையில் தான் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளும் அமைச்சர்களும் உள்ளனர்” என்றார். 
நன்றி: விடியல்

Post a Comment

0 Comments