Subscribe Us

header ads

பலஸ்தீன தாயிடமிருந்து...!

(முனையூர் ஏ. ஸமட்)

தென்றலையே
அழ வைக்கும்
என் மழலைகளின்
அழுகுரல்
உலக வீட்டின் உறுப்பினர்கள்
செவிகளில் விழவில்லையா...?

எனது
குடியிருப்புக்களில்
அத்துமீறி வந்தமர்ந்த
நரகத்து அரக்கர்களின்
துப்பாக்கிச் சன்னங்கள்
தேசத்து மலர்களைக் குடிக்கிறது.

மனிதமே..!
உலகப் பொலிஸ்காரனின்
மிச்சத்தில் வளர்ந்த
ஓநாய்களின்
வேட்டைகளால் குதறப்படும்
புருசர்களின் உதிரம்
என்னை
செந்நிறமாக்குகிறது..

சாத்தான்களின் சாக்கடைகளில்
சல்லாபம்போடும்
அரபியச் சீமான்களே...!
சல்லடையிடப்படும்
என் மண்ணின்
மைந்தர்களின்
கரங்களை வலிமையாக்க
இன்னும் ஏன் தயக்கம..?;;

சோதரே..!
மேற்குலகின்
முதலைக் கண்ணீர்
உங்கள்
உணர்ச்சிகளைத் தடுக்க வேண்டாம்..!
அடக்கி ஒடுக்கும்
'இஸ்ரேல்'
அதர்மவாதிகளை
உயிரோடு உயிரை எரிக்கும்
கொடுங்கோலர்களை
எதிர்த்துப் போராடும்
எந்தன் வீரப் போராளிகளுக்கு
கைகொடுங்கள்
பறிக்கப்பட்ட எனது
முகவரியை மீட்பதற்காய்..

என்னை மீட்டெடுப்பதற்காக
உயிர்துறக்கும்
புதல்வர்களின் போரட்டாம்
வெற்றிகானும் நாள் விரைவினிலேதான்
அதற்காய்
வல்ல இறைவனிடம்
கரங்களை ஏந்துங்கள்
விடுதலை வெற்றிக் கொடி
பலஸ்தீனத் தேசத்தில் பறக்கட்டும்..!


✔ Like US: https://www.facebook.com/kalpitiyavoice
✔ Follow Us: https://twitter.com/kalpitiyavoice
✔ Follow Us in Groups: https://www.facebook.com/groups/kalpitiyavoice

Post a Comment

0 Comments